Advertisment

சென்னை சி.ஏ.ஏ. போராட்டத்தில் ஜெயலலிதா குரல்: ‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் மாணவி ஒருவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல அவரது குரலில் மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என்று பேசிய வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகிவருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai washermanpet caa protest, chennai caa portest, சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம், சிஏஏ எதிர்ப்பு போராட்டம், சென்னை ஷாஹீன் பாக், ஜெயலலிதா போல பேசிய மாணவி, வைரல் வீடியோ, chennai shaheen bagh, girl speaks like jayalalitha viral viedo, caa protest

chennai washermanpet caa protest, chennai caa portest, சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம், சிஏஏ எதிர்ப்பு போராட்டம், சென்னை ஷாஹீன் பாக், ஜெயலலிதா போல பேசிய மாணவி, வைரல் வீடியோ, chennai shaheen bagh, girl speaks like jayalalitha viral viedo, caa protest

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் மாணவி ஒருவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல அவரது குரலில் மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என்று பேசிய வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகிவருகிறது. ‘

Advertisment

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தலைநகர் டெல்லியில் ஷாஹீன் பாக் பகுதியில் சிஏஏ, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை எதிர்த்து பெண்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்திலும் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அரசியல் கட்சியினர், அரசியல் இயக்கங்கள் என பலரும் பங்கேற்று தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

வடக்கே தலைநகர் டெல்லியில் ஷாஹீன் பாக்கில் சிஏஏ-வுக்கு எதிராக நடைபெறும் தொடர் போராட்டத்தைப் போல, சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-வை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னை வண்ணாரப்பேட்டை தென்னகத்தின் ஷாஹீன் பாக் என்றும் சென்னை ஷாஹீன் பாக் என்றும் அரசியல் நோக்கர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை ஷாஹீன் பாக் என்று டுவிட்டரில் இணையத்தில் ட்ரெண்ட் ஆனது.

இந்த நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் மாணவி ஒருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா போல அவருடைய குரலில் பேசிய வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகிவருகிறது.

சென்னை வண்ணாரப்பேட்டை சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில், ஒலிபெருக்கியில் பெண் ஒருவர் ஜெயலலிதாவின் குரலில் பேச அதை ஜெயலலிதா தோற்றத்தில் இருந்த மாணவி, ஜெயலலிதாவின் பாவனையில் திரும்ப பேசி கவனத்தைப் பெற்றுள்ளார். அதில் அவர் ஜெயலலிதாவின் குரலில் கூறியிருப்பதாவது “என் ரத்தத்தின் ரத்தமான, என் உயிரினும் மேலான என் அருமை உடன் பிறப்புகளே, மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று அடிக்கடி சொன்னேனே... அதே போல், மக்களால் எனது தலைமையிலான அரசு மக்களுக்காகவே எனது தலைமையிலானா அரசு என்று நான் அடிக்கடி சொன்னேனே. நான் சொன்னேன் எங்களுடைய செயல்பாடு. எங்களுடைய திட்டங்கள் எல்லாமே மக்களுக்காகத்தான். மக்களுக்காகவே தன்னை அர்ப்பணித்த தலைவியை கவனம் ஒரு பெண்ணை கொண்ட ஒரு இயக்கம். இந்த இயக்கம் மென்மேலும் இந்த இயக்கம் இருக்கும் வரை தமிழர்கள் வாழ்வு நலம்பெற செயல்படும் என்றெல்லாம் சொன்னேனே... பல வாக்குறுதிகளை கொடுத்தேனே... எத்தனை நூற்றாண்டு காலம் வந்தாலும் என் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும். மக்களுக்காகத்தான் இயங்கும். என்று வார்த்தைக்கு வார்த்தை சொன்னேனே. நான் இருந்திருந்தால் இந்த மக்கள் விரோத சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் போன்ற கொடுமையான சட்டங்கள் இந்த தமிழ்நாட்டில் நுழைந்திருக்குமா? என் அருமை பெண்களும் பாசமிகு குழந்தைகளும் தங்கும் அவலம் நடந்திருக்குமா? என் அருமை மக்களே இந்த தமிழகத்தில் என் ஆட்சி இருக்கும் வரை என் ஆட்சி என்று சொல்லும் என் தொண்டர்கள் இருக்கும் வரை சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு இங்கே இடம் இல்லை. மத்திய அரசின் அடிமைகளில்லை என் தொண்டர்கள். இதை நிரூபிக்கும் ஒரு கணம்தான் இந்த இடம். என் அரசு சென்னை ஷாஹீன் பாக்கில் கூடியிருக்கும் எம் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இது என் கட்டளை. என் கட்டளையே என் அரசின் வழிமுறை. என்னை விரும்பியவர்கள், என் மீது மரியாதை வைத்திருந்தவர்கள், என் உண்மை தொண்டர்களாக இருந்தால் நிச்சயம் என்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றுவார்கள். நிறைவேற்ற வேண்டும் என்ற நம்பிக்கையோ விடைபெறுகிறேன். என் மக்களே, அருமை மக்களே, மீண்டும் பதிவிடுகிறேன். மக்களுக்காக நான்... மக்களுக்காகவே நான்” என்று பேசியுள்ளார்.

Tamil Nadu Chennai Viral Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment