45-வது செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் கோப்பையை வென்ற இந்திய செஸ் அணி வீரர்கள் தானியா சச்தேவ் மற்றும் டி குகேஷ், 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்றபோது ரோஹித் சர்மா நடந்ததைப் போல நடந்து சாம்பியன் கோப்பையைத் தூக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
ஆங்கிலத்தில் படிக்க: Chess Olympiad 2024: Indian champions recreate Rohit Sharma’s iconic walk as they lift trophy. Watch
ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், ஓபன் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு ஆகிய இரண்டிலும் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா செஸ் போட்டியில் வரலாறு படைத்தது. இந்திய ஆடவர் அணி 44 ஆட்டங்களில் ஒரு ஆட்டத்தில் மட்டும் தோல்வியடைந்து, 27 ஆட்டங்களில் வெற்றி பெற்று, மீதமுள்ள ஆட்டங்களை டிரா செய்தது, பெண்கள் அணி அஜர்பைஜானுக்கு எதிராக 3 ஆட்டங்களில் வெற்றியும், ஒரு ஆட்டத்தில் டிராவும் செய்தது.
இந்த நிகழ்வின் சாம்பியன்களின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. ஐ.சி.சி டி20 உலகக் கோப்பை 2024 கோப்பையை வென்று கோப்பையை தூக்கும்போது, ரோஹித் ஷர்மாவின் நடந்ததைப் போலவே, செஸ் அணி வீரர்களும் நடந்து வரலாற்று வெற்றியைக் கொண்டாடும் செஸ் அணியின் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோவில் தானியா சச்தேவ் மற்றும் டி குகேஷ் ஆகியோர் தங்கள் கையில் கோப்பைகளுடன் ரோஹித் சர்மா போல நடந்து காட்டுகிறார்கள். இப்படி கொண்டாட்டமாக நடப்பது என்பது முதன்முதலில் 2022 FIFA உலகக் கோப்பையின் போது லயோனல் மெஸ்ஸியால் தொடங்கப்பட்டது.
இந்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
India team spirit! Celebration time! Olympiad Champions!
— Susan Polgar (@SusanPolgar) September 22, 2024
🇮🇳🥇🏆🥇🏆🇮🇳#BudapestOlympiad #FIDE100 @FIDE_chess @aicfchess @WOMChess pic.twitter.com/jzJXBzQOs1
இந்த வீடியோ 1 கோடியே 92 லட்சம் பார்வைகளுடன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் வீரர்களுக்கு வாழ்த்துகளைக் குவித்து வருகிறது. ஒரு பயனர் எழுதினார், “வாழ்த்துகள் பல, டீம் இந்தியா, நீங்கள் தங்கப் பதக்கத்தை வென்று நாட்டைப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “கேமராவில் 18 வயது இளைஞனுக்கு நெருக்கமாகா நடித்திருக்கிறார் குகேஷ்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மூன்றாவது பயனர், “ரோஹித் கொண்டாட்டத்தைப் போலவே தெரிகிறது. ஆஹா நமக்குள் என்ன ஒரு போட்டி” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
How could these superstars not provide us with added #MondayMotivation?
— anand mahindra (@anandmahindra) September 23, 2024
Double Gold medals. Double the motivation.
And congratulations @ChessbaseIndia for the entertaining coverage
But even more for your passion & commitment to this incredible game! pic.twitter.com/O7ITznfhpe
இதற்கிடையில், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது மண்டே மோட்டிவேஷன் பதிவை இந்திய செஸ் ஒலிம்பியாட் சாம்பியன்களுக்கு அர்ப்பணித்தார். வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவிக்கப்படும் தருணம் வீடியோவில் பதிவாகியுள்ளது. “இந்த சூப்பர்ஸ்டார்களால் எப்படி நமக்கு கூடுதல் மண்டே மோட்டிவேஷன் வழங்க முடியாது? இரண்டு தங்கப் பதக்கங்கள். டபுள் மோட்டிவேஷன், மற்றும் பொழுதுபோக்கு கவரேஜுக்கு செஸ் பேஸ் இந்தியாவுக்கு (@ChessbaseIndia) வாழ்த்துக்கள். ஆனால், இந்த நம்பமுடியாத விளையாட்டின் மீதான உங்கள் ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்புக்கு இன்னும் நிறைய வாழ்த்துகள்” என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டி குகேஷ் மட்டுமில்லாமல், இந்தியாவின் அர்ஜூன் எரிகாசி 11 போட்டிகளில் 10 வெற்றிகளுடன் போர்டு 3-ல் சிறந்த செயல்பாட்டாளராகப் பெயரிடப்பட்டார். ஹரிகா துரோணவல்லி, திவ்யா தேஷ்முக், வந்திகா அகர்வால், தானியா சச்தேவ், வைஷாலி ரமேஷ்பாபு, மற்றும் அபிஜித் குண்டே ஆகியோர் அடங்கிய மகளிர் அணி, 2024 செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டைப் பதக்கத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை உறுதி செய்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.