New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/kid-china_1200_twt.jpg)
அந்த பாதாளா சாக்கடைக்குள் சேகரமாகியிருக்கும் மீத்தேன் எரிவாயுவினால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது
Child in China sent flying after he drops live firecracker inside manhole : சீனாவில் சில இடங்களில் இருக்கும் ”மேன்ஹோல்களில்ல்” குழந்தைகள் பட்டாசினை கொளுத்திப் போடும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சமீபத்தில் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் முதலில் மூன்று குழந்தைகள் பாதாள சாக்கடைகள் மூடப்பட்டிருக்கும் கதவுகளுக்குள் பட்டாசுகளை கொளுத்தி போடுகின்றனர். அந்த பட்டாசு வெடித்து அந்த கதவு திறக்க, அதன் மேலே அமர்ந்திருக்கும் சிறுவன் சிறிது தூரம் பறந்து சென்று கீழே விழுகின்றான். இது போன்ற அந்நாட்டில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை தொகுத்து அந்த செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
Children across China are dropping firecrackers into manholes, causing explosions that send them flying pic.twitter.com/qaMTYkjvLP
— SCMP News (@SCMPNews) February 9, 2021
அந்த பாதாளா சாக்கடைக்குள் சேகரமாகியிருக்கும் மீத்தேன் எரிவாயுவினால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என்றும், இது மிகவும் மோசமான செயல்பாடுகள் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவிக்க ஒரு சிலரோ இது என்ன fireworks_to_manhole_ ஹேஷ்டாக் சேலஞ்ச் ஏதாவது சமூக வலைதளங்களில் செல்கிறதா என்று கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.