New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/09/1-31.jpg)
சிறுவன் சிக்கிக் கொண்டதை கவனிக்காத அந்த பெண் காரை ஓடி சென்றார்
மும்பையில் காரின் அடியில் சிக்கிக் கொண்ட 8 வயது சிறுவன், அதிசயமாக உயிர் தப்பும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவில் கேமிராவில் பதிவாகியுள்ளன.
மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிறுவர்கள் அனைவரும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது 8 வயது சிறுவன் ஒருவன், ரோட்டில் கீழே அமர்ந்தப்படி தனது ஷூ லேசை கட்டிக் கொண்டிருந்தான்.
அப்போது, பெண் ஒருவர் ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த தனது காரை எடுத்துக் கொண்டு சர்ரேன்று சென்றார். எதிர்பாராத விதமாக, அவரின் காருக்கு அடியில் சிறுவன் சிக்கிக் கொண்டான். ஆனால் சிறுவன் சிக்கிக் கொண்டதை கவனிக்காத அந்த பெண் காரை ஓடி சென்றார்
அடியில் மாட்டிக் கொண்ட சிறுவன், சிறு காயங்களும் இன்றி உயிர் தப்பிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி அரங்கேறிய இந்த சம்பவத்தி, காரை ஓட்டிச் சென்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர்.
காரின் அடியில் மாட்டிக் கொண்ட சிறுவன பயத்தில் கத்தியப்படி ஓடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுப் போன்ற எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க பெற்றோர்கள், எப்போதும் பிள்ளைகளை கவனத்துடன் கண்காணிக்க வேண்டும்.
#Watch | Kid in Chembur gets run over by a car. What you see next will blow your mind away! pic.twitter.com/bGFz19gkka
— Voice of Mumbai (@GreaterMumbai) 26 September 2018
கைது செய்யப்பட்ட பெண், 3 நாட்களுக்கு பின்பு விடுவிக்கப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.