சிரியா மக்கள் பாதுகாப்பு என்ற தன்னார்வ குழுவின் வெள்ளை தலைக்கவச ட்விட்டர் பக்கத்தில், சிரியாவின் அர்மனாஸ் கிராமத்தில் நிலநடுத்தில் வீட்டின் இடிபாடுகளில் சிக்கிய சிறுவனை 3 நாட்களுக்கு பிறகு, உயிருடன் பாதுகாப்பாக மீட்கப்பட்ட வீடியோவைப் பகிர்ந்து சின்ன துயர்த்திலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் அந்நாடுகளை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. உலக நாடுகள் பலவும் துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவுவதற்காக மீட்புக் குழுவினர் மற்றும் நிவாரணப் பொருட்கள், மருந்துகளை அனுப்பி வருகின்றனர்.
அதே நேரத்தில், துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சிரியாவில் மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களைக் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு சிறுவனை பாதுகாப்பாக மீட்கும் வீடியோ வெளியாகி நிலநடுக்கத்தால் ஏற்பட்ட துயரத்திலும் ஒரு சின்ன நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிரியா மக்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற ஒரு தன்னார்வ குழுவின் வெள்ளை தலைக்கவசங்கள் ட்விட்டர் பக்கம், சிரியாவில் உள்ள அர்மனாஸ் கிராமத்தில் நிலநடுக்கத்தில் இடிந்து விழுந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஒரு சிறுவனை பாதுகாப்பாக மீட்டதும் அனைவரும் மகிழ்ச்சியில் மூழ்கிய வீடியோவைப் பகிர்ந்துள்ளனர்.
"அற்புதங்கள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன; குரல்கள் மீண்டும் வானத்தைத் எட்டுகின்றன. நிலநடுக்கம் ஏற்பட்ட முதல் நாளில் சிரியாவின் இட்லிப் கிராமப்புறத்தில் உள்ள அர்மனாஸ் கிராமத்தில் இடிந்த வீட்டின் இடிபாடுகளில் இருந்து ஒரு சிறுவன் மீட்கப்பட்டது போன்ற தருணங்கள் மகிழ்ச்சி நிறைந்தவை” என்று என்று வெள்ளை தலைக்கவசம் ட்வீட் செய்துள்ளனர்.
இந்த வீடியோ வியாழக்கிழமை பகிரப்பட்டதிலிருந்து, ட்விட்டரில் 66,000 க்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர். மனதை உருக்கும் இந்தவீடியோ ஆன்லைனில் பலரின் இதயத்தை உருக்கியுள்ளது. ஒரு பயனர் கருத்துத் தெரிவிக்கையில், “கிட்டத்தட்ட 3 நாட்களுக்கு இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும்போது அதைத் தாங்கிக்கொள்ள அதிக தைரியம் தேவை. அந்த சிறுவனின் அழகான புன்னகையைப் பாருங்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர், “எப்படித்தான் அந்த சிறுவன் இடிபாடுகளுக்கு அடியில் மரணத்தை வென்று உயிர் பிழைத்தான்’ என்று வியப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார். மற்றொரு ட்விட்டர் பயனர், “என்ன ஒரு ஆற்றல்மிக்க மகிழ்ச்சியான குழந்தை! நிலநடுக்கம் இடிபாடுகளில் சிக்கியபோதும்கூட அவருடைய மன உறுதியை வெல்ல முடியவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.