பெண்களின் உள்ளாடை அளவுக்கேற்ப தள்ளுபடி ஆஃபர் அறிவித்த உணவகத்தால் சர்ச்சை

சீனாவில் உணவகம் ஒன்று பெண்களின் ‘ப்ரா’ உள்ளாடை அளவுக்கு ஏற்ப தள்ளுபடிகளை அறிவித்தது சர்ச்சையானது. இதையடுத்து, அந்த அறிவிப்பை உணவகம் திரும்ப பெற்றது

சீனாவில் உணவகம் ஒன்று பெண்களின் ‘ப்ரா’ அளவுக்கு ஏற்ப தள்ளுபடிகளை அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

சீனாவில் ஹாங்சோ பகுதியில் உள்ள மால் ஒன்றில் செயல்பட்டுவரும் Trendy Shrimp Restaurant ‘the bigger, the better’ என்ற பெயரில் விலை தள்ளுபடி ஆஃபர் அறிவித்தது. அதன்படி, பெண்கள் தங்களின் ‘ப்ரா’ அளவுக்கு ஏற்ப தள்ளுபடியை பெறுவர் என அந்த உணவகம் அறிவித்தது. இதனை அங்குள்ள பத்திரிக்கை ஒன்று செய்தியாக வெளியிட்டது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த உணவகம் சர்ச்சைக்குரிய அறிவிப்பை அகற்றியது.

அந்த விளம்பரத்தில், பெண்கள் வெவ்வேறு அளவிலான ‘ப்ரா’-வை அணிந்திருப்பது போல கார்ட்டூன் ஒன்றும் வெளியிடப்பட்டிருந்தது. மேலும், “இந்த நகரமே மார்பகங்களை தேடுகிறது”, என்ற வாசகமும் அந்த அறிவிப்பு பலகையின் மேல் எழுதப்பட்டிருந்தது. மேலும், அவர்களின் ‘ப்ரா’ அளவுக்கேற்ப அவர்கள் பெறும் ‘ஆஃபர்’ குறித்தும் அந்த பலகையில் இடம்பெற்றிருந்தது.

பிபிசி அளித்த தகவலின்படி, “இந்த அறிவிப்பு பெண்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளது”, என இதற்கு எதிராக சர்ச்சைகள் எழுந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 1-ஆம் தேதி பொதுத்தளத்திற்கு தெரிய வந்ததுமே அகற்றப்பட்டது. இருப்பினும், அந்த உணவகத்தின் பொது மேலாளர் லான் ஷெகாங் இதில் மன்னிப்பு கேட்பதற்கு ஒன்றுமில்லை எனவும், மக்களை கவர்வதற்காக கையாளப்பட்ட யுக்தி எனவும் தெரிவித்தார். மேலும், இந்த அறிவிப்புக்குப் பின் உணவகத்தின் வாடிக்கையாளர்கள் 20 சதவீதம் உயர்ந்ததாக அவர் குறிப்பிட்டார். ”இந்த அறிவிப்பின்படி நாங்கள் சந்தித்த சில பெண்கள் பெருமைக்குரியவர்கள். அவர்களிடம் மறைக்க ஒன்றுமே இல்லை.”, என அவர் கூறினார்.

மேலும், பெண்கள் உணவகத்தின் ஆண் பணியாளர்களிடம் எதுவுமே கூற தேவையில்லை எனவும், பெண் பணியாளர்களிடமே கூறி, தள்ளுபடியை பெற்றுக்கொண்டால் போதும் எனவும் அவர் தெரிவித்தார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

×Close
×Close