New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/30/chinese-boy-runs-2025-06-30-13-52-09.jpg)
நிலநடுக்கமா? முதல்ல பசியை அடக்குவோம்... இணையத்தை சிரிக்க வைத்த சீனச் சிறுவனின் வைரல் வீடியோ!
நிலநடுக்கமே வந்தாலும், பசிக்கு பஞ்சம் வைக்காத ஒரு குட்டி சிறுவனின் வைரல் வீடியோ இணைய உலகையே வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. அத்தனை பேரும் உயிர் பிழைக்க ஓட, அந்த சிறுவனோ, "முதல்ல பசிய அடக்குவோம்!" எனக் கிளம்பி, இணையத்தின் செல்லப் பிள்ளையாகிவிட்டான்.
நிலநடுக்கமா? முதல்ல பசியை அடக்குவோம்... இணையத்தை சிரிக்க வைத்த சீனச் சிறுவனின் வைரல் வீடியோ!
தெற்கு சீனாவில் நடந்த வேடிக்கையான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூன் 23 அன்று, குவாங்டாங் மாகாணத்தின் கிங்யுவான் நகரை 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது. அத்தனை பேரும் உயிர் பிழைக்க ஓட, அந்த சிறுவனோ, "முதல்ல பசிய அடக்குவோம்!" எனக் கிளம்பி, இணையத்தின் செல்லப் பிள்ளையாகிவிட்டான்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், குடும்பத்தினர் வீட்டில் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். நிலநடுக்கம் வந்ததும், அப்பா தன் இளைய மகனைத் தூக்கிக்கொண்டு கதவை நோக்கிப் பறக்கிறார். மூத்த மகனும், "வீட்டு வேலை பாக்குறவங்க கூட ஓடுங்க!" என்று சொல்லிக்கொண்டே பின்னால் ஓடுகிறான். ஆனால், திடீரென ஒரு திருப்பம்! அவன் வந்த வேகத்தில் மீண்டும் மேசையை நோக்கித் திரும்பினான்!
Nothing comes between this kid and his meal not even an earthquake.
— Science girl (@gunsnrosesgirl3) June 25, 2025
pic.twitter.com/eWs218JHUH
"அவனுக்கு என்ன ஆச்சு?" என்று அப்பா குழம்ப, பையனோ, அங்கிருந்த சாதத்தையும், கறித்துண்டுகளையும் அள்ளியெடுத்து வாயில் திணித்து கொண்டான். அதோடு நிற்காமல் ஒரு தட்டு காய்கறியையும், இறைச்சியையும், சாதம் இருந்த கிண்ணத்தையும் தூக்கிக்கொண்டு வெளியேற முயன்றான்.
"9 மாடி கீழே, சூடான சாப்பாட்டோடவாடா ஓடுவ?" என்று அப்பா கதற, எப்படியோ சாப்பாட்டை கீழே வைக்க வைத்து, அவனை வெளியேற்றினார். ஒரு மணி நேரம் கழித்து, நிலநடுக்கம் அடங்கியதும், அப்பா அவனிடம் "வா வீட்டுக்கு போலாம்" என்றதும், அந்த சுட்டி, "நான் என் ட்ரோனை எடுத்துட்டு வர வீட்டுக்குள்ள போலாமாப்பா?" என்று கேட்டபோது, அப்பாவும், இணையமும் விழுந்து விழுந்து சிரித்தன.
ஜிமு நியூஸ்-க்கு அளித்த பேட்டியில், அப்பா Li, "அந்த சமயத்துல நான் பதட்டத்துல 'ஓடு! ஓடு!'னு தான் கத்தினேன். என் பையனுக்கு இயல்பாவே நகைச்சுவை உணர்வு ஜாஸ்தி. வீடியோவைப் பார்த்த பிறகுதான் இது எவ்வளவு காமெடின்னு எனக்கே புரிஞ்சது" என்றார். மேலும், அவன் தூக்க வந்த உணவுகள் அவனுக்குப் பிடித்தமானவை இல்லையாம், "அவனுக்கு சாப்பிடப் பிடிக்கும் அவ்வளவுதான்!" என்று அப்பா கூறி, இணையத்தின் சிரிப்பொலியை இன்னும் கூட்டினார்.
"உயிர் தான் முக்கியம்! பொருளைப் பத்தி யோசிக்காதே! நிலநடுக்கம் வந்தா முதல்ல தப்பிச்சு, பாதுகாப்பைப் பாரு!" என்று மகனுக்கு அப்பா அறிவுரை வழங்கினாலும், இந்தச் சிறுவனின் "சாப்பாட்டுப் பிரியம்" இணையத்தை குட்டி நிலநடுக்கமே ஆக்கியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.