சமூக வலைதளங்களில் கொங்கு தமிழ் வட்டார வழக்கில் பேசி அசத்தும் ‘சின்ன அம்முனி’யின் வீடியோக்கள் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Advertisment
உலகில் பேசப்படும் மொழிகளில் தமிழ் மொழி தொன்மையானது. எழுத்துமொழி ஒன்றாக இருந்தாலும், தமிழின் வட்டார வழக்கு பல வகையானது. தொண்டை மண்டல வட்டார வழக்கு, சென்னை வட்டார வழக்கு, நடுநாடு வட்டார வழக்கு, கொங்குநாடு வட்டார வழக்கு, மதுரை வட்டார வழக்கு, நெல்லை வட்டார வழக்கு, நாஞ்சில் வட்டார வழக்கு என மக்கள் பேசும் வட்டார வழக்குகள் எல்லாமே தனித்தன்மை கொண்டது. மக்களின் வட்டார வழக்கு பேச்சுகள் கேட்பதற்கு மிகவும் இனிமையாகவும் அழகாகவும் இருக்கும்.
அந்த வகையில், கொங்கு மண்டல வட்டார வழக்கு அழகாகவும் நக்கலாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும். நகரமயமாதலில் வட்டார வழக்குகள் தேய்ந்துகொண்டு வந்தாலும், இன்னும் வட்டார வழக்கு பேச்சுகள் உயிர்ப்புடன்தான் இருக்கிறது. அதிலும், இளைய தலைமுறையினர் சிலர், வட்டார வழக்கில் அற்புதமாக பேசி அசத்துகிறார்கள்.
இன்றைய சமூக ஊடகங்களின் காலத்தில், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் கொங்கு தமிழில் பேசி அசத்துகிறார் ‘சின்ன அம்முனி’ என்கிற உள்ள இளம் பெண்.
சின்ன அம்முனி கொங்கு தமிழில் பேசிய வீடியோவில், “ஒருவர் ரிசல்ட் வந்துருச்சா?” என்று கேட்கிறார்.
அதற்கு சின்ன அம்முனி, “அட! அதுக்குதானப்பா அந்த போடுகால கூப்பர்றேன். அது செல்லு எங்கயொ தொடர்பு எல்லைக்கு அப்பால தெக்கால கெடக்குதாமா… எடுக்க மாட்டங்குது…” என்று கொங்கு தமிழில் கூறுகிறார்.
பொளைக்குமா இல்ல போயிருமா என்று கேட்டதற்கு, “நம்மளதுலாம் எங்போய் பொளைக்போகுது… அதெலாம் அன்னைக்கே தெரியும். அலாரத்த ஆப் பண்ணிட்டு ஆப் பண்ணிட்டு தூங்கயில அரகரப் போய்டும்னு… என்னமொரு அக்யானத்துக்கு பாக்கலாம்னுட்டு கூப்பர்றேன் எடுக்க மாட்டிங்கிது… நம்ம நேரமாட்டங்குது கெரகம் த்தூ..” என்று சின்ன அம்முனி கொங்கு தமிழில் பேசி அசத்துகிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"