Advertisment

குழந்தையாக இருந்தால் எதுவுமே ஆச்சர்யம் தான் ....: 2 கோடி முறைக்கு மேல் பார்க்கப்பட்ட வீடியோ

Christmas gift - cute girl reaction : குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற பாடல் வரியை மெய்யாலுமே மெய்ப்பிப்பதாகவே இந்த வீடியோ உள்ளதாக அதனை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
christmas, christmas gift, ,Christmas 2019,twitter,christmas gift,banana,Justice Mojica, viral video, 20 million views, viral

christmas, christmas gift, ,Christmas 2019,twitter,christmas gift,banana,Justice Mojica, viral video, 20 million views, viral, கிறிஸ்துமஸ், கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ் 2019, வாழைப்பழம், பரிசு, குழந்தை, ஆச்சர்யம், வீடியோ, வைரல்

குழந்தைகள் தாங்கள் பார்க்கும் யாவையும் ஆச்சரியமாகத்தான் பார்க்கும், அணுகும். குழந்தைகள் தான் அழகு என்றால், அவைகள் செய்யும் செயல்கள் அதைவிட அழகாக இருக்கும்.

Advertisment

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

அமெரிக்காவின் நீதித்துறையில் பணியாற்றிவருபவர் நீதிபதி மோஜிகா. இவர் தனது 2 வயது மகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு வாழைப்பழம் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். தனது மகளுக்கு விலை குறைந்த ஒரு பொருளை பரிசளித்திருப்பதாகவும், அதற்கு அவள் எவ்வாறு ரியாக்ட் செய்கிறாள் என்பதை பார்க்கப்போவதாக நண்பர்களிடம் அறிவித்திருந்தார்.

வாழைப்பழத்தை கலர் காகிதத்தால் சுற்றி அதையே ஒரு பரிசுப்பொருள் போல செய்து, 2 வயது மகளிடம் அளித்தார். ஆர்வமாக வாங்கிக்கொண்ட மகள், அதை பிரிக்கத் தொடங்கினார். எப்படியும் ஏமாற்றம் அடைவாள் அதை பார்த்து ரசிக்கலாம் என்று எண்ணியிருந்த மோஜிகாவிற்கு பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது.

மகளை ஏமாற்றி விளையாடலாம் என்பதற்காக இந்த நிகழ்வை, மோஜிகா, வீடியோவில் பதிவு செய்தார். மகளும்,அந்த பரிசுப்பொருளை பிரிக்கத்துவங்கினார். சில சுற்று காகிதங்களுக்கு பிறகு, அதில் வாழைப்பழம் இருந்ததை கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார். வாழைப்பழத்தை அம்மாவிடம் தந்து தோல் உரித்து தரச்சொல்லி, அதை ருசிக்கத் துவங்கினார்.

இதெல்லாம் ஒரு கிப்டா? என்று தன்னிடம் சண்டை போடுவாள் என்று எதிர்பார்த்த தந்தை மோஜிகாவிற்கு மகளின் இந்த செயல் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

இந்த வீடியோவை, மோஜிகா, சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. கிட்டத்தட்ட 2 கோடிக்கும் மேல் இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று என்ற பாடல் வரியை மெய்யாலுமே மெய்ப்பிப்பதாகவே இந்த வீடியோ உள்ளதாக அதனை பார்த்தவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Social Media Viral Christmas Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment