An elephant dressed in a Santa Claus costume presents gifts for kindergarten children at the Jirasartwitthaya school during Christmas celebrations in Ayutthaya province, north of Bangkok, Thailand, Monday, Dec. 23, 2019. (AP Photo/Sakchai Lalit)
Christmas 2019 Viral video Elephants turn Santa : ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காத்திருப்பது கிறிஸ்துமஸின் சாண்டாக்களுக்காக தான். அவர்கள் தான் நாம் எதிர்பார்க்காத நேரத்தில் எதிர்பாராத அன்பளிப்புகள் மட்டும் கிஃப்ட்டுகள் கொடுத்து நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்கள். அப்படி தான் வடக்கு பாங்காங்கிலும் குழந்தைகள் காத்துக் கொண்டிருந்தனர்.
Advertisment
Christmas 2019 Viral video Elephants turn Santa
ஆனால் அவர்களுக்கு யார் சாண்டாக்களாக மாறி அன்பளிப்புகள் கொடுத்தது என்று தெரியுமா? யானைகள்! ஆம்.. தாய்லாந்தின் வடக்கு பாங்காக்கில் அமைந்திருக்கிறது ஜிரசர்த்வித்யா பள்ளி. ஆயுத்தையா பகுதியில் அமைந்திருக்கும் அந்த பள்ளியில் நான்கு யானைகள் சிவப்பு நிறத்தில் சாண்டா அலங்காரம் எல்லாம் செய்து குழந்தைகளுக்கு அன்பளிப்புகளை வழங்கின.
Advertisment
Advertisements
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஹிட் அடித்துள்ளது. இந்த நடைமுறை இன்று மட்டும் அல்ல, கடந்த 15 வருடங்களாக நடைபெற்று வருகிறது. அன்பளிப்புகள் மட்டுமல்லாமல் யானைகளும் குழந்தைகளும் ஒன்றாக சேர்ந்து கிறிஸ்துமஸ் ட்ரீ வைத்தெல்லாம் தங்களின் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.