டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரரின் ‘உடனடி நடவடிக்கையால்’ ஒரு பயணிக்கு சரியான நேரத்தில் சி.பி.ஆர் செய்து அவரது உயிரைக் காப்பாற்றிய பின்னர் அந்த சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் நெட்டிசன்களின் இதயங்களை வென்று வைரலானது. அர்ஷித் அயூப் என்ற பயணி, ஆகஸ்ட் 20-ம் தேதி ஸ்ரீநகருக்கு விமானத்தில் ஏறவிருந்தபோது, திடீரென சரிந்து விழுந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பின்னர், அந்த பயணி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் பகிர்ந்த வைரல் வீடியோவில், அந்த பயணி தனது உடமைகளுடன் நின்றுகொண்டிருந்தபோது திடீரென சரிந்து தரையில் விழுவதைப் பார்க்க முடிகிறது. மக்கள் அவரை சூழ்ந்ததால், சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவருக்கு சி.பி.ஆர் முதலுதவி செய்தனர்.
“மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் உடனடி நடவடிக்கைக் குழுவின் விரைவான சி.பி.ஆர். (இதய நுரையீரல் புத்துயிர்) முதலுதவி அர்ஷித் அயூப் என்ற பயணியின் உயிரைக் காப்பாற்றியதில் முக்கிய பங்கு வகித்தது. செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 20) காலை ஐ.ஜி.ஐ விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல் இருந்து ஸ்ரீநகர் விமானம் நோக்கிச் சென்ற அயூப் மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்தார். அவர் டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மேலும் அவர் நன்றாக இருப்பதாகக் கூறப்படுகிறது” என்று சி.ஐ.எஸ்.எஃப் கூறியதாக” ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி ஐ.ஜி.ஐ விமான நிலையத்தில் மாரடைப்பு காரணமாக சரிந்து விழுந்த பயணிக்கு சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்கள் சி.பி.ஆர் முதலுதவி செய்த வைரல் வீடியோவைப் பாருங்கள்:
#WATCH | A quick CPR (Cardiopulmonary resuscitation) to a passenger Arshid Ayoub by the Central Industrial Security Force's quick reaction team played a crucial role in establising his condition. Ayoub, bound for Srinagar flight from Terminal 2 of the IGI Airport on Tuesday… pic.twitter.com/b21wZG78Oa
— ANI (@ANI) August 22, 2024
இந்த வீடியோ இணையத்தின் கவனத்தை ஈர்த்தவுடன், சமூக ஊடக பயனர்கள் சி.ஐ.எஸ்.எஃப் பணியாளர்களைப் பாராட்டினர். இதற்கு கருத்து தெரிவித்த ஒரு எக்ஸ் பயனர், “நல்ல வேலை!! மிகவும் பாராட்டுகள்” என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர் எழுதினார், “நல்ல வேலை. கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், தொழிற்சாலை அல்லது எந்த துறையிலும் பணிபுரியும் அனைத்து இளைஞர்களுக்கும் சி.பி.ஆர் கற்பிக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
ஜூலை மாதம், ஒரு பெண் மருத்துவர் ஒரு முதியவரைக் காப்பாற்றி அவருக்கு சி.பி.ஆர் செய்து பாராட்டுகளைப் பெற்றார். டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 2-ல் தனது விமானத்திற்காக மருத்துவர் காத்திருந்தபோது மாரடைப்பால் ஒரு நபர் சுருண்டு விழுந்தார் என்று ஏ.என்.ஐ செய்தி வெளியிட்டு இருந்தது.
“என் கணவர் டாக்டர் ரமாகாந்த் கோயல் என்னுடன் இருந்தார், நாங்கள் அங்கு சென்றபோது, டாக்டர் உமேஷ் பன்சால் மற்றும் அவரது மனைவி டாக்டர் டோலி பன்சால் தம்பதியும் இருந்தனர். நாங்கள் நான்கு பேரும் பார்த்தபோது, அவர் முற்றிலும் அசைவற்று இருந்தார். அவரது சுவாசம் நின்றுவிட்டது, அவரது இதயத் துடிப்பு முற்றிலும் நின்று விட்டது, மேலும் அவர் சுவாசிக்கவே இல்லை” என்று அந்த பெண் மருத்துவர் ஏ.என்.ஐ இடம் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.