New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/04/CAR-56.jpg)
நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா பெயருக்குதான்
கடந்த இரண்டு நாட்களாக சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் தம்மால் முடிந்த வரை மீம்ஸ்களாக போட்டு அந்த வீடியோவை ட்ரோல் செய்து வருகின்றனர். அப்படி என்ன இருக்கிறது அந்த வீடியோவில் என்று பார்த்தால் மாற்றுத்திறனாளி ஒருவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடவுள் என்கிறார்.
சினிமா ஸ்டிரைக்கு பிறகு,கடந்த வெள்ளிக்கிழமை முதல் திரையரங்குகளில் புதிய படங்கள் ரீலீஸ் ஆகின. பல நாட்கள் கழித்து தியேட்டரில் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதுதான் அந்த விளம்பரம்.
கோயிலுக்கு வரும் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், தனக்கு வேலை கிடைத்து விட்டதாக தனது தோழியிடம் சந்தோஷமாக கூறுகிறார். அப்போது கோயிலில் இருக்கும் குருக்கள், யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கேட்கிறார். அதற்கு அந்த பெண் "சாமி அர்ச்சனை என் பெயருக்கு இல்லை. சாமி பெயருக்கு" என்கிறார். அதற்கு குருக்கள், எந்த சாமி பெயருக்கு என கேட்க, அந்த பெண்ணோ "நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஐயா பெயருக்குதான்" என்கிறார்.
இந்த விளம்பரம் ஒளிப்பரப்பாகும் போது ரசிகர்கள் தியேட்டரில் கத்த ஆரம்பித்து விடுகின்றனர். போதாத குறைக்கு வெளியில் வந்து மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோவால் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர். திரையரங்குகளில் வெளியான புதிய படங்களை விட முதல்வர் விளம்பரம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை பார்க்காதவர்கள் இப்போது பார்த்து விடுங்கள்
https://www.facebook.com/trolltrousers2.0/posts/726838477706711
https://www.facebook.com/kaaritv/posts/2144894662193373
https://www.facebook.com/trolltrousers2.0/posts/726864537704105
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.