New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/22/Yxpalpe1DaC0XUPKAyZt.jpg)
முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்விற்காக அலங்காரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மற்றும் பழங்களை பொதுமக்கள் பறித்துச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இரண்டு நாட்கள் சுற்றுப் பயணமாக முதலமைச்சர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார். மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் அவரை வரவேற்கும் விதமாக முகப்பில் அமைக்கப்பட்டிருந்த வளைவில் பல்வேறு காய்கறிகள் மற்றும் பழங்கள் அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்றதும் அங்கிருந்த பழங்கள், காய்கறிகளை பொதுமக்கள் பறித்துச் சென்றனர். குறிப்பாக உயரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த காய்கறிகளை, ஏணி மீது ஏறி கத்திகளை வைத்து வெட்டி எடுத்துச் சென்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சிவகங்கையில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்வில் அவரை வரவேற்பதற்காக அலங்காரத்திற்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள், காய்கறிகளை பொதுமக்கள் பறித்துச் சென்றனர்.#Sivagangai #Stalin pic.twitter.com/qo9GkrwLqr
— Indian Express Tamil (@IeTamil) January 22, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.