Viral Viedo: பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்கிறார்கள். ஆனால், பாயும் புலி பயப்படுமா? இந்த வீடியோவைப் பாருங்கள். காட்டில் நீரோடையில் எதேச்சையாக ஒரு புலியும் ஒரு பாம்பும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்கின்றன. அப்போது யார் பயந்து பின் வாங்குகினார்கள் என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காடுகளில் எல்லா உயிரினங்களுமே முக்கியமானவைதான். அதன் பங்களிப்பு விகிதம் வேண்டுமானால் மாறுபடலாம். காடுகளில் இருக்கும் யானைகளும் புலிகளும்தான் அந்த காட்டின் பரப்பை உறுதி செய்கின்றன. காடுகளைப் பாதுகாக்கவும், வன விலங்குகளைப் பாதுகாக்கவும் அரசு திட்டங்களைத் திட்டி கோடிக் கணக்கில் செலவு செய்கிறது. ஏனென்றால், காடுகள் இல்லாமல் வனவிலங்குகள் மட்டுமல்ல மனிதர்களும் வாழ முடியாது.
இந்திய வனத்துறை உயர் அதிகாரிகளான ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் வனவிலங்குகளைப் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக காடுகளில் பதிவு செய்யப்பட்ட வன விலங்குகளைப் பற்றிய வீடியோக்களை தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வீடியோக்கள் பார்க்கும்போதும் மிகவும் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்துபவையாக உள்ளன.
அந்த வகையில், ஐ.எஃப்.எஸ் அதிகாரி ரமேஷ் பாண்டே மிகவும் சுவாரசியமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காட்டில் நீரோடையில் எதேச்சையாக ஒரு புலியும் ஒரு பாம்பும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்கின்றன. அப்போது யார் பயந்து பின் வாங்குகினார்கள் என்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், காட்டில் ஒரு நீரோடையில் லேசாக தண்ணீர் வழிந்து செல்கிறது. நீரோடையை ஒரு பெரிய பாம்பு கடக்க முயற்சி செய்கிறது. அப்போது அங்கே ஒரு புலி வருகிறது. பாம்பைப் பார்த்த புலி முதலில் முன்னேறி வருகிறது. ஆனால், பாம்பு தற்காப்புக்காக படமெடுத்து சீறுகிறது. இதை எதிர்பார்க்காத புலி சற்று பின்வாங்குகிறது. நீரோடையில் புலியும் பாம்பும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள், ஆனால் பாயும் புலி நடுங்குமா என்றால், பாம்பு படமெடுத்து சீறினால் புலியும் பயந்து பின்வாங்கத்தான் செய்யும் என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“