இந்திய ஊடகங்களை அம்பலப்படுத்தியது கோப்ரா போஸ்ட் - டுவிட்டரில் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

பணத்திற்காக மோடிக்கும் இந்துத்துவத்திற்கும் ஆதரவாக செயல்பட்டது இந்திய ஊடகங்கள் - கோப்ரா போஸ்ட். சமீபத்தில் வெளியான இந்தச் செய்தியால் டுவிட்டர் முழுவதும் ஊடகங்கள் மீது குற்றச்சாட்டுகள்...

பணத்திற்காக மோடிக்கும் இந்துத்துவத்திற்கும் ஆதரவாக செயல்பட்டது இந்திய ஊடகங்கள் – கோப்ரா போஸ்ட். சமீபத்தில் வெளியான இந்தச் செய்தியால் டுவிட்டர் முழுவதும் ஊடகங்கள் மீது குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றது.

1. #AmitShah

கர்நாடக மாநிலத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் வேட்பாளராக பாஜக முன்னிறுத்துகிறது. எடியூரப்பாவை ஆதரித்து பிரசாரம் செய்ய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, கர்நாடக மாநிலம் வந்தார். கர்நாடகாவில் தேவாங்கர் நகரில் செய்தியாளர்களை அமித்ஷா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் அண்மையில் கூறுகையில், நாட்டில் ஊழல் மிகுந்த அரசுகளுக்கு போட்டி வைத்தால் அதில் எடியூரப்பா அரசுக்குத்தான் முதல் இடம் கொடுக்க வேண்டியிருக்கும் என்றார்’ என பேட்டியில் குறிப்பிட்டார் அமித்ஷா. எடியூரப்பா ஏற்கனவே கர்நாடகா முதல்வராக பதவி வகித்தவர் என்பது மட்டுமல்ல, ஊழல் புகாரில் சிக்கி மீண்டு வந்தவரும்கூட! எனவே அவரது பெயரை அமித்ஷா இப்படி குறிப்பிட்டது அருகில் இருந்த எடியூரப்பாவையும் அதிர வைத்துவிட்டது.

2. #KarnatakaElections2018

கர்நாடகா மாநிலத்திற்கான 2018 சட்டசபை தேர்தல் தேதி மே மாதம் 12 ஆம் தேதி நடைப்பெறும் என்று, தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார். கர்நாடாகாவில் தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. வரும் மே மாதத்துடன், காங்கிரஸ் ஆட்சிக் காலம் முடிவுக்கு வரவுள்ளதால் அம் மாநிலத்திற்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ளது. வேட்பு மனுத்தாக்கல் ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 24 ஆம் தேதி வரை நடைப்பெறும். பின்பு, வேட்பு மனு மீதான பரீசீலனை ஏப்ரல் 25 ஆம் தேதி நடத்தப்படும். வேட்பு மனுவை திரும்ப பெறும் கடைசி நாள் ஏப்ரல் 27 ஆம் தேதி ஆகும். மே மாதம் 12 ஆம் தேர்தல் நடத்தப்பட்டு ஏப்ரல் 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

3. #CobraExposedIndianMedia

இந்தியாவின் பிரபல ஊடங்கங்கள் பணத்திற்காக மோடிக்கு ஆதரவான செய்திகளையும் இந்துத்துவத்திற்கு ஆதரவாகவும் செய்திகள் வெளியிட்டதை கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் ஊடகத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோப்ரா போஸ்ட் வெளியிட்டுள்ள இந்த விவரங்களில் பல்வேறு இந்திய ஊடகங்களின் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் பிரபல செய்தி சேனல் இந்தியா டீவி பெயர் இடம் பெற்றுள்ளது. இருப்பினும் இதற்கு அந்த தொலைக்காட்சி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

4. #NeutrinoProject

தேனி மாவட்டம், தேவாரம் பகுதியிலுள்ள பொட்டிப்புரம் கிராமத்தில் உள்ள அம்பரப்பர் மலையில் ரூ.1,500 கோடி செலவில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அம்பரப்பர் மலையைக் குடைந்து நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் தேனி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்றும், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்றும் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் இந்த எதிர்ப்புகளை மீறி, நியூட்ரினோ ஆய்வுக் மையம் அமைக்க இன்று அனுமதி வழங்கப்பட்டது. இந்த ஆய்வு மையத்தால் சுற்றுச் கூழலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று சுற்றுச்சூழல் மதிப்பீட்டுக்குழு பரிந்துரைத்து. இதையடுத்து தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

5. #WorldTheatreDay

உலகம் முழுவதும் சர்வதேச தியேட்டர் தினம் மார்ச் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தத் தினம் முதன் முதலில் இன்டர்நேஷனல் தியேட்டர் இன்ஸ்டிடியூட் சார்பாக 1961ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்தத் தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும், நாடக கலைஞர்கள், திரைப்படத்துறையினர், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உட்படப் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close