மக்கள் பயன்படுத்திய பாட்டில்களை குப்பையாக கண்டபடி கண்ட இடங்களில் வீசி எறியும்போது, அவை சில நேரங்களில் விலங்குகளின் உயிருக்கு ஆபத்தாக நேரிடுவது உண்டு.
அதே போல, வனப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள், மது குடித்துவிட்டு வீசி எறிந்து உடைக்கும் மது பாட்டில்கள் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகளின் கால்களில் காயத்தை ஏற்படுத்தி அவற்றின் உயிருக்கு ஆபத்தாகி விடுகின்றன.
அதனால்தான், தயவு செய்து காலி பாட்டில்களை கண்ட இடங்களில் வீசி எறியாதீர்கள், முறையாக அப்புறப்படுத்துங்கள் என்று சுற்றுச் சூழல் மற்றும் விலங்குகள் ஆர்வலர்கள் பொதுமக்களிடம் வலியுறுத்துகிறார்கள்.
கண்ட இடத்தில் வீசி எறியப்பட்ட ஒரு இருமல் சிரப் பாட்டிலை ஒரு நாகப் பாம்பு இரையென்று நினைத்து விழுங்கி விட்டு, அதை வெளியே கக்க முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும்போது, பாம்பு ஹெல்ப்லைன் தன்னார்வலர்கள் மீட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
A Common cobra swallowed a cough syrup bottle in Bhubaneswar & was struggling to regurgitate it.
— Susanta Nanda (@susantananda3) July 3, 2024
Volunteers from snake help line gently widened the lower jaw to free the rim of the base of the bottle with great risk & saved a precious life.
Kudos 🙏🙏 pic.twitter.com/rviMRBPodl
ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள 2 வீடியோ கிளிப்புகளில், நாகப் பாம்பு ஒன்று இருமல் சிரப் பாட்டிலை விழுங்கிவிட்டு அதை வெளியே தள்ள முடியாமல் போராடுவதையும் தன்னார்வலர்கள் அதை மீட்பதையும் காட்டுகிறது.
அந்த வீடியோவில், நாகப் பாம்பு ஒன்று இருமல் சிரப் பாட்டிலை விழுங்கிவிட்டு அதை வெளியே தள்ள முடியாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்திருந்த பாம்புகளின் ஹெல்ப்லைன் தன்னார்வலர்கள் பாம்பின் தாடையை லேசாக அழுத்தி பாட்டிலை வெளியே தள்ளும் விதமாக உதவி செய்கிறார்கள். இறுதியில் அந்த பாம்பு மெல்ல மெல்ல பாம்பின் வாயில் இருந்து பாட்டிலை வெளியே தள்ளப்படுகிறது. இறுதியில் பாம்பு பாட்டிலை முழுவதுமாக வெளியே தள்ளிவிட்டு உயிர் பிழைத்துக்கொள்கிறது.
இந்த வீடியோ குறித்து ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா குறிப்பிடுகையில், “புவனேஸ்வரில் ஒரு நாகப்பாம்பு இருமல் சிரப் பாட்டிலை விழுங்கியது, அதை மீண்டும் வெளியே தள்ள முடியாமல் போராடியது.
பாம்பு ஹெல்ப் லைனைச் சேர்ந்த தன்னார்வலர்கள், பாட்டிலின் அடிப்பகுதியின் விளிம்பை மிகுந்த ஆபத்துடன் விடுவிப்பதற்காக பாம்பின் கீழ் தாடையை மெதுவாக விரித்து, விலைமதிப்பற்ற உயிரைக் காப்பாற்றினர்.
பாராட்டுக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பாம்பைக் கண்டு அச்சப்படுபவர்கள்கூட இப்படி ஒரு பாம்பு இருமல் சிரப் பாட்டிலை விழுங்குவிட்டு உயிருக்கு போராடும் வீடியோவைப் பார்த்து பாம்புக்காக மனம் வருந்தவே செய்கிறார்கள். அதனால், தயவு செய்து பாட்டில்களை கண்ட இடங்களில் வீசி எறியாதீர்கள். முறையாக அப்புறப்படுத்துங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.