Advertisment

மின்னல் தாக்கியதால் தீப்பற்றி எரிந்த தென்னை: கோவை ஷாக் வீடியோ

கோவை ரத்தினபுரி சாஸ்திரி நகர் பகுதியில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் பற்றி எரிந்தது.

author-image
WebDesk
New Update
Coconut caught on fire due to lightning strike

தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை பலத்த காற்றுடன் லேசான மழை பெய்தது.

இந்த நிலையில் ரத்தினபுரி பகுதியில் டேனியல் என்பவருக்கு சொந்தமான காலியான இடத்தில் இருந்த தென்னை மரத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது.

Advertisment

இதனால் மரம் தீப்பற்றி எறிய தொடங்கியது. இதனை கண்ட பகுதி மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்விடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை முழுவதுமாக அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

நெருக்கமாக வீடுகள் அதிகம் உள்ள பகுதியில் மின்னல் இறங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

பி.ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment