சூலூர் அருகே விவசாய தோட்டத்தில் பலமான இடி இடித்ததில் பச்சைத் தென்னை மரம் தீப்பிடித்து எறிந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள பதுவம்பள்ளியை அடுத்த ராயர்பாளையம் என்ற பகுதியில் எஸ் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் திடீரென மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. அப்போது கனத்த இடி இடிக்கவே அவர் தோப்பில் இருந்த தென்னை மரம் ஒன்றில் இடி இடித்ததில், பச்சை தென்னை மரத்தில் இடி விழுந்து தீ பற்றி உள்ளது. பற்றிய தீ வேகமாக மரம் முழுவதும் பரவத் தொடங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: மின்னல் தாக்கியதால் தீப்பற்றி எரிந்த தென்னை: கோவை ஷாக் வீடியோ
இதனை தோட்டத்து உரிமையாளர் ராமச்சந்திரனின் மகன் செல்போனில் படம் பிடித்து உள்ளூர் whatsapp குரூப்புகளில் பரப்பியுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil