பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
Coimbatore News in Tamil | பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையத்தில் தென்னைநார் தொழிற்சாலை அருகில் மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி டபிள்யூ ஹெச்.சி.டி பாம்பு பிடிக்கும் தன்னார்வலர்கள் சந்தானம், அஷ்வின், சரண் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அங்கு மறைந்திருந்த மலைப்பாம்பை போராடி பத்திரமாக லாபகமாக உயிருடன் பிடித்தனர்.
பிடிபட்ட மலைபாம்பு 8 அடி நீளம் கொண்டது. இதையடுத்து பிடிபட்ட மலைப் பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்தனர் பின்னர் வனத்துறையினர் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள அடர்ந்த வனப்பகுதி விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH || கோவை: பொள்ளாச்சியில் 8 அடி நீள மலைப்பாம்பு… லாபகமாக பிடித்த தன்னார்வலர்கள் – வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #snake pic.twitter.com/hasrCCKsVr
— Indian Express Tamil (@IeTamil) November 30, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil