New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/29/siruvani-road-accident-2025-07-29-12-07-56.jpg)
பேருந்தை முந்த முயன்ற கார்: கோவையில் பயங்கர விபத்து - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!
பரபரப்பான கோவை சிறுவாணி சாலையில், கோர விபத்து நிகழ்ந்துள்ளது. ஆலாந்துறைப் பகுதியில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற ஒரு கார், எதிர்த்திசையில் வந்த 3 இருசக்கர வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

பேருந்தை முந்த முயன்ற கார்: கோவையில் பயங்கர விபத்து - அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்!#Coimbatore pic.twitter.com/s1FuBpF4q6
— Indian Express Tamil (@IeTamil) July 29, 2025
நொடிப்பொழுதில் நிகழ்ந்த கோர விபத்து
சம்பவத்தன்று, சிறுவாணி சாலையில் வழக்கம்போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அதிவேகமாக வந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை முந்திச்செல்ல முயன்றது. அப்போது, எதிர்திசையில் எந்த வாகனமும் வரவில்லை என நினைத்து ஓவர்டேக் செய்ய முற்பட்டது. அதே நேரத்தில் எதிர்த்திசையில் அடுத்தடுத்து 3 இருசக்கர வாகனங்கள் வந்துகொண்டிருந்தன. கண்ணிமைக்கும் நேரத்தில், அதிவேகக் கார் அந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. மோதிய வேகத்தில், 3 இருசக்கர வாகன ஓட்டிகளும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த கோர விபத்தில், இருசக்கர வாகன ஓட்டிகளில் 2 இளைஞர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் உதவியுடன் அவர்கள் மீட்கப்பட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை குறித்த தகவல்கள் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை, ஆனால் காயங்கள் கடுமையாக இருப்பதாகத் தெரிகிறது. இந்த விபத்து நிகழ்ந்ததற்கான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.