வீடியோ: எஸ்.பி வேலுமணி ஒயிலாட்டம்; சொந்த ஊர் திருவிழாவில் என்னமா ஸ்டெப் போட்றாரு!

சொந்த ஊர் கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சொந்த ஊர் கோவில் திருவிழாவில் ஒயிலாட்டம் ஆடி அசத்திய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coimbatore: AIADMK S.P. Velumani Oyilattam Folk Dance village festival video Tamil News

கோவை சுகுணாபுரம் பகுதியில் அமைந்து உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.

Advertisment

கோவை மாவட்டம் குனியமுத்தூரை அடுத்து உள்ள சுகுணாபுரம் பகுதியில் அமைந்து உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் திருக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதில் அருவி ஒயிலாட்ட குழுவினரின் மாபெரும் ஒயிலாட்ட நிகழ்வு திருக்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், தனது சொந்த ஊர் திருவிழாவில் கலந்து கொண்ட அ.தி.மு.க கழக தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி ஒயிலாட்டம் ஆடி அசத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Viral Video Minister Sp Velumani Social Media Viral Viral Coimbatore Admk Aiadmk Sp Velumani Viral News Tamilnadu Viral Dance

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: