கோவை குடியிருப்பு பகுதிகளில் சுற்றி திரிந்த அரிய வகை உயிரினமான எறும்புத்தின்னியை பாதுகாப்பாக மீட்ட வனத்துறையினர் வனப்பகுதியில் விட்டனர்.
வன உயிரினங்கள் மனிதர்களால் வேட்டையாடப்பட்டு அழிக்கப்படும் போது, அவைகளில் எஞ்சியுள்ளவை அரியவகை வன உயிரினமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அவ்கையில் மண்ணுளியன் பாம்பு, நட்சத்திர ஆமைகள், எரும்பு தின்னி உள்ளிட்ட அரியவகை வன உயிரினமாக இருந்து வருகின்றன. அவற்றை வேட்டையாடி வரும் மனிதர்கள், அவற்றை சர்வதேச அளவில் சந்தைப்படுத்தி கொள்ளை லாபம் பார்க்கிறார்கள். இதனால், அரிய வகை உயிரினங்கள் மற்றும் பாதுகாக்கப்படக் கூடிய உயிரினங்கள் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருக்கின்றன. அவ்வாறான விலங்குகள் தென்பட்டால் உடனே வனத்துறையிடம் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தி வருகின்றனர்.
கோவையில் குடியிருப்பு அமைந்த பகுதிகளில் வட்டமிட்ட அரிய வகை உயிரினமான எரும்புதின்னி, பொதுமக்கள் தந்த தகவில் அடிப்படையில் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் மீட்டனர். மீட்கப்பட்ட எரும்புதின்னி பத்திரிமாக வனப்பகுதியில் விடப்பட்டது. பாதுகாக்கப்பட வேண்டிய அரிய வகை உயிரினங்களில் எரும்புதின்னி இடம்பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.