காவலாளி மீது தாக்குதல்: பெண்களை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமியின் சி.சி.டி.வி காட்சிகள்

கோவையில் பெண்களை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி, காவலாளியை தாக்கி விட்டு பெண்கள் விடுதிக்குள் புகுந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore attack on private hostel guard CCTV footage mysterious assailant following the women Tamil News

கோவையில் பெண்களை பின்தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி, காவலாளியை தாக்கி விட்டு பெண்கள் விடுதிக்குள் புகுந்த சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கோவை, சரவணம்பட்டி பகுதியில் மகளிர் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த மகளிர் விடுதியில் தங்கி இருந்த இரு பெண்கள் நேற்று விடுதிக்கு சென்று கொண்டு இருந்த போது, அவர்களை 45 வயது மதிக்கத்தக்க மர்ம  நபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்துள்ளார். அப்போது, விடுதியில் இருந்த தனியார் காவலரை தாக்கி மகளிர் விடுதுக்குள் நுழைய முற்பட்டு உள்ளார். 

Advertisment

அந்த மர்ம நபர் தாக்கியதில்  பலத்த காயமடைந்த காவலாளி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து விடுதி உரிமையாளர் தரப்பில் கோவை சரவணம்பட்டி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தும் காவல் துறையின் வர காலதாமதம் ஏற்பட்டதால் மர்ம நபர்  அங்கு இருந்து தப்பி ஓடினார்.  

இதுகுறித்து இன்று காலை மீண்டும் கோவை விடுதிகள் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சரணம்பட்டி காவல் நிலையத்தில் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தற்போது தனியார் விடுத சங்கத்தின் சார்பாக கோவை மாநகர அவள் ஆணையரிடம் புகார் அளித்து உள்ளனர்.பெண்களை பின்தொடர்ந்து மகளிர் விடுதிக்குள் நுழைய முயன்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Viral Coimbatore Viral Video

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: