கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து வெளியே நீண்ட மாதங்களாகவே ஒற்றை ஆண் காட்டு யானை சமயபுரம் நெல்லித்துறை குரும்பனூர் தாசம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. நீண்ட தந்தங்கள், மிகப்பெரிய உருவமாக காணப்பட்ட அந்த யானையை உள்ளூர் மக்கள் பாகுபலி என்று பெயரிட்டு செல்லமாக அழைத்து வந்தனர்.
Advertisment
காட்டு யானை பாகுபலி இரவு நேரத்தில் வனத்தை விட்டு வெளியே வந்து கிராமங்களுக்கு அருகாமையில் உள்ள விவசாய தோட்டத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இந்நிலையில், அந்த யானையைப் பிடித்து சென்று அடர் வனத்தில் விட விவசாயிகள் வலியுறுத்தினர். இந்த நிலையில் அந்த யானைக்கு திடீரென வாயில் காயம் ஏற்பட்டது.
இதனை அடுத்து யானையை மணக்கால்நடை மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்து யானையைப் பிடித்து செல்ல முயன்ற நிலையில் யானை அவர்களிடம் சிக்காமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்நிலையில் தினமும் காலையில் சமயபுரம் சாலையை கடந்து செல்லும் காட்டு யானை பாகுபலி கடந்து 5 மாத காலமாக சமயபுரம் பகுதிக்கு வராமல் இருந்தது.
இந்த நிலையில், இன்று காலை காட்டு யானை பாகுபலி வழக்கமாக சமயபுரம் பகுதியில் செல்லும் சாலையில் சாலையைக் கடந்து கல்லார் பகுதிக்கு சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.