New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/05/nctykpSM8tO9ocMgVjG5.jpg)
கோவையில், குப்பை கொட்டிய இடத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
கோவை மாவட்டம், ரத்தினபுரி வேதாம்பாள் நகர் அருகே உள்ள காலி இடத்தில் அப்பகுதி பொதுமக்கள் தினசரி குப்பை கொட்டி வருகின்றனர். அதிக அளவில் குப்பை கொட்டப்பட்டதால், அப்பகுதியைச் சுற்றி துர்நாற்றமும் வீசி வருகிறது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் குப்பை கொட்டும் இடத்தில் தீ வைத்ததாக கூறப்படுகிறது. குப்பை மேட்டில் தீப்பற்றி எரிவதை கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதி பதற்றமாக காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் குப்பை கொட்டிய இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.#Coimbatore #fire pic.twitter.com/T8kjm5kn5T
— Indian Express Tamil (@IeTamil) February 5, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.