போடா... எல்லாம் என் ஏரியா.... தனக்கான ஸ்டைலில் ஆற்றில் அசால்டாக நடந்து செல்லும் ஒற்றைக் காட்டு யானை பற்றி விவசாயி எடுத்த செல்போன் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக ஒற்றை மற்றும் கூட்டமாக காட்டு யானைகள் முகாமிட்டு அங்கு வீடுகளில் வைத்து இருக்கும் அரிசி, பருப்பு போன்ற சமையல் பொருட்களையும், விவசாய நிலங்களில் ஆடு, மாடுகளுக்கு வைத்து உள்ள தீவனங்கள் மற்றும் விலை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதத்தை ஏற்படுத்தியும் அதனை தடுக்க வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி வருவது தொடர்கதை ஆகியுள்ளது.
இதனை தடுக்க தமிழக அரசு மற்றும் வனத் துறையினருக்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மனுக்கள் அளித்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் அரசில தினங்களுக்கு முன்பு வனக் கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த அவரிடம் முறையிட்ட போது அது குறித்து மத்திய அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்ததாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தை பாதுகாத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழி வகை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இதனிடையே தொண்டாமுத்தூர் அருகே உள்ள நரசிபுரம் காவடி அம்மன் கோவில் அருகே உள்ள ஆற்று வழியாக போடா... எல்லாம் என் ஏரியா.... தனக்கான ஸ்டைலில் ஆற்றில் அசால்டாக நடந்து செல்லும் ஒற்றைக் காட்டு யானையை அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்து உள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“