பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக மலை அடிவாரங்களில் காட்டு மாடு, புலி, சிறுத்தை, செந்நாய், கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக நடமட்டம் உள்ள பகுதியாகும்,மலை அடிவாரங்களில் வானத்தை விட்டு வெளியேறும் யானைக் கூட்டங்கள் தனியாருக்கு சொந்தமான தென்னந்தோப்புக்கள், விவசாய நிலப் பகுதிகளில் உணவுகள் தேடியும் நீர்நிலைப் பகுதிகளில் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது.
வனத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் வனத்துறையினர் மற்றும் வேட்டை திறப்பு காவலர்கள் சுழற்சி முறையில் யானை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
இதைனையடுத்து, காடம் பாறை வாண்டல்மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து ஆழியார் அணைக்கு வந்த காட்டு யானைகள் பகல் மற்றும் மாலை நேரங்களில் ஆழியார் அணை பின்புறம் உள்ள வன பகுதியிலிருந்து வெளியேறிய யானைக் கூட்டங்கள் முகாமிட்டுள்ளதால் வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகள் ஒட்டி வாகனங்கள் நிறுத்தக்கூடாது எனவும் பாதுகாப்பாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறித்துள்ளனர்.
#Video || கோவை: ஆழியார் அணை பகுதியில் முகாம் போட்டுள்ள யானைகள் கூட்டம்!https://t.co/gkgoZMHWlc | #Coimbatore | 📹 @rahman14331 pic.twitter.com/PDtbPBzlW9
— Indian Express Tamil (@IeTamil) June 8, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.