Coimbatore News in Tamil | கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கார் பழுது செய்யும் நிறுவனத்திற்கு ஆனைகட்டி பகுதியில் இருந்து கார் ஓட்டி வந்துள்ளனர். இந்நிலையில் காரின் உள்ளே பாம்பு இருப்பதை கண்ட ஊழியர்கள் உடனடியாக பாம்பு பிடிக்கும் நபரான ரபிஸை அழைத்துள்ளனர்.
காரில் இருந்த பாம்பை ரபிஸ் லாவகமாக பிடித்தார். தொடர்ந்து பாம்பை பரிசோதித்ததில், இது ஒரு வினோத வகையான பறக்கும் பாம்பு என தெரிந்தது.
இந்த வகையான பாம்புகள் மலை மேல் இருக்கும் மரங்களில் மட்டுமே இருக்கும் எனவும் காரில் பயணம் செய்தவர்கள் ஆனைகட்டி பகுதிக்கு சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் மரத்தின் மீது இருந்த பாம்பு இந்த காரில் ஏறி உள்ளதாக தெரிவித்துள்ளனர். பிடிபட்ட பாம்பை உடனடியாக வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டது.
#Watch || கோவை: காரினுள் சிக்கிய விநோத பறக்கும் பாம்பு – வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #snake | #VIDEO | @rahman14331 pic.twitter.com/3xYlehV33L
— Indian Express Tamil (@IeTamil) February 8, 2023
#Watch || கோவை: காரினுள் சிக்கிய விநோத பறக்கும் பாம்பு – வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #snake | #VIDEO | @rahman14331 pic.twitter.com/1SXfAoZavn
— Indian Express Tamil (@IeTamil) February 8, 2023
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil