BJP Gayathri Raguram – Coimbatore Tamil News: பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் சார்பில் கோவை வடகோவை பகுதியில் உள்ள குஜராத் சமாஜத்தில் மாநில அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் தலைவர் காயத்ரி ரகுராம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்த அவர், 1998 குண்டுவெடிப்பு தொடர்பான புகைப்படத்தை கம்பேர் செய்து கோவை வெடி விபத்து தொடர்பாக ட்விட்டரில் பதிவு வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு ஆத்திரம் அடைந்தார்.
நான் யாரையும் பயமுறுத்தவில்லை, அச்சமடைய வைக்கவில்லை என்றும் தொடர்ந்து செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார். இதற்குப் பின் ஆத்திரமடைந்தவர் சத்தமாக பதில் அளித்தார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த பாஜகவினர் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு ஏற்பட்டது.
#Video || குண்டு வெடிப்பு சர்ச்சை; பிரஸ் மீட்டில் மீடியாவிடம் வாக்குவாதம்: காயத்ரி ரகுராம் வீடியோhttps://t.co/gkgoZMqkWC | #CoimbatoreBlast | #GayathriRaguram pic.twitter.com/OtykbEGalu
— Indian Express Tamil (@IeTamil) October 29, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil