Advertisment

கோவை மளிகை கடையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: பரபர சி.சி.டி.வி. காட்சிகள்

இருசக்கர வாகனத்தில் வந்த கோவையை சேர்ந்த பிலிப் மேத்யூ (வயது 23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் பெண்ணிடம் 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்தை ஒப்புக் கொண்டனர்.

author-image
WebDesk
New Update
Coimbatore Gold chain snatched from woman at grocery store CCTV Tamil News

கோவை அன்னூர் ஜீவா நகர் பகுதியில் மளிகை கடையில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பிடுங்கிச் சென்ற பரபரப்பு சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளது.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கோவை மாவட்டம் அன்னூர் ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49). இவர் இதே பகுதியில் சிவ செல்வி என்ற பெயரில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், சம்பவத்தன்று வழக்கம் போல விற்பனைக்காக மளிகை கடையில் நின்று கொண்டு இருந்தார். 

Advertisment

அப்போது  அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் தனலட்சுமியின் மளிகை கடையில் பொருட்கள் வாங்குவது போல் வந்து அவரின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்று உள்ளார்.

இது சம்மந்தமாக தனலட்சுமி அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். தங்க சங்கலியை மர்ம நபர் அறுத்து சென்ற காட்சி சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி இருந்தது. சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணையை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், அன்னூர் அருகே குன்னத்தூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த போது சந்தேகத்து இடமான வகையில் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த கோவையை சேர்ந்த பிலிப் மேத்யூ (வயது 23) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அதில் அவர் தனலட்சுமியிடம் இருந்து தங்கச் சங்கிலியை பறித்து சென்றதை ஒப்புக் கொண்டார். இதை அடுத்து அவரிடம் இருந்த இருசக்கர வாகனம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் மேத்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment