பி.ரஹ்மான் – கோவை மாவட்டம்.
கோவை உக்கடம்- ஈச்சனாரி சாலையில் இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டப்பட்டிருந்த சிறிய ரக கூண்டிற்குள் சிறுவனை அமர வைத்தபடி இருசக்கர வாகனத்தை இயக்கி செல்லும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
அப்பகுதியில் டிவிஎஸ் XL சூப்பர் வாகனத்தை இளைஞர் ஒருவர் இயக்கும் நிலையில், வாகனத்தின் முன்புறம் மற்றொரு இளைஞர் அமர்ந்துள்ளார். வாகனத்தில் பின்புறம் சரக்கு பொருள்களை வைக்கும் இடத்தில் சிறியரக கூண்டு ஒன்றில், சுமார் ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்தபடி பயணித்துள்ளனர். இதனை அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து பேஸ்புக் போன்ற சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த காட்சிகள் பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருப்பினும் பாதுகாப்பற்ற முறையில் குழந்தைகளை வைத்து பயணம் செய்ய கூடாது என வலைதளவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#WATCH || கோவை: பறவையைப் போல் கூண்டிலில் அடைக்கப்பட்டு பயணிக்கும் சிறுவன் – வீடியோ!https://t.co/gkgoZMHWlc | #Coimbatore | @rahman14331 pic.twitter.com/DISHPg05mj
— Indian Express Tamil (@IeTamil) April 18, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil