scorecardresearch

வீடியோ: ஜாலியாக குளிப்பாட்டும் சிறுவர்கள்… ஜோராக உறங்கும் கும்கி யானை!

Watch viral video: Kids bathing Kumki elephant Tamil News: சிறுவர்களின் குளிப்பாட்டால் அசந்து உறங்கும் கும்கி யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Coimbatore: Kumki elephant being bathed by Kids, Video goes viral
Coimbatore – Kumki elephant

Coimbatore News in Tamil: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் உள்ள டாப்ஸ்லிப் சிறந்த சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இங்கு அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோழிகமுத்தி, வரகளியார் யானைகள் முகாமில் வளர்ப்பு யானைகள் மற்றும் கும்கி யானைகள் உள்ளிட்ட 27 ஆணைகள் வனத்துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இங்கு வளர்க்கப்படும் கும்கி யானைகளை கொண்டு ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டுதல் அல்லது பிடிக்கும் பணியில் ஈடுபட்ட ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதைத்தவிர வனப்பகுதியில் ரோந்து செல்லும் பணிகளுக்கும் பயிற்சி பெற்ற கும்கி யானைகளை பயன்படுத்துகின்றனர். இங்கு பராமரிக்கப்படும் யானைகளை தினமும் முகாம் அருகே உள்ள ஆற்றில் யானை பாகன் குளிக்க வைத்து உணவு வழங்குவது வழக்கம்.

இந்நிலையில் அங்குள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகள் 38 வயது உள்ள மாரியப்பன் என்கின்ற கும்கி யானையை அங்குள்ள ஆற்றில் குளிக்க வைக்கும்போது யானை சுகமாக தண்ணீரில் படுத்திருக்கும் காட்சி தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore kumki elephant being bathed by kids video goes viral

Best of Express