கோயம்புத்தூர்: தமிழக அரசு தமிழக முழுவதும் போக்குவரத்து விதிமுறை மீறிய நபர்களுக்கு அபராத தொகை இரு மடங்காக அதிகரித்து உள்ளது. இந்நிலையில், கோவை கற்பகம் கல்லூரி அருகே உள்ள டோல்கேட் பகுதியில் நெடுஞ்சாலைத் துறை ரோந்து வாகனத்தில் இருந்த காவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திருப்பூரில் இருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த லாரி ஓட்டுநர் சரியான சீருடை அணியாமல் லாரி ஒட்டி வந்ததற்கு காவலர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு 5000 ரூபாய் அபராதமும் விதித்தனர். இதுகுறித்து லாரி ஓட்டுனர் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சீருடை அணியாததற்கு 5000 அபராதம் விதிப்பதா ? என்று கூறி மேலும் பல வழக்குகளை பதிவு செய்தால் பணத்தை நான் கட்டுகிறேன். மேலும் வழக்கு பதிவு செய்யுங்கள் என்றும் அந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதற்கு முன்பு 500 ரூபாய் வழக்கிற்கு 200 ரூபாய் லஞ்சம் வாங்க வில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்தக் காவலர் நீங்கள் கொடுத்த நபரிடம் அதைக் கேட்க வேண்டும் என்றும் கூறுகிறார். இந்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்த லாரி ஓட்டுநர், காவலர்கள் தலையில் தொப்பி அணியாமல் பணி செய்வதை யார் கேள்வி எழுப்புவது என்று பதிவு செய்துள்ளார். தற்போது அந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— Indian Express Tamil (@IeTamil) February 15, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil