New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/18/motorbike-cctv-2025-07-18-04-44-23.jpg)
இரு மோட்டார் பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம் சி.டி.சி டிப்போ அருகே 2 மோட்டார் பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து நடந்தபோது பதிவான சி.சி.டி.வி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இரு மோட்டார் பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, மேட்டுப்பாளையம் சி.டி.சி டிப்போ அருகே 2 மோட்டார் பைக்குகள் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து நடந்தபோது பதிவான சி.சி.டி.வி வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிடிசி டிப்போ அருகே வசித்து வருபவர் மாரிமுத்து(50).இவரது மனைவி சண்முகவள்ளி(45). இவர்களது மகன் ராஜ்குமார்(18). இந்நிலையில் நேற்றிரவு ராஜ்குமார் தனது தாய் சண்முகவள்ளியுடன் தங்களுக்கு சொந்தமான மோட்டார் பைக்கில் வீட்டிலிருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி சென்றுள்ளார்.
மேட்டுப்பாளையம் சி.டி.சி டிப்போ அருகே 2 மோட்டார் பைக்குகள் மோதி விபத்து; பெண் படுகாயம்: சிசிடிவி வீடியோ#viralvideo pic.twitter.com/PKiSxxy1uK
— Indian Express Tamil (@IeTamil) July 17, 2025
அப்போது, ராயல் பேக்கரி அருகே கோவை சாலையை கடக்க முயன்றுள்ளார்.இதேவேளையில் காரமடையில் இருந்து மேட்டுப்பாளையம் ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த அபிலேஷ்(26) என்பவர் தனது மோட்டார் பைக்கில் மேட்டுப்பாளையம் நோக்கி வந்துள்ளார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இரு மோட்டார் பைக்குகளும் மோதிக்கொண்டதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மூவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தலை,முகம், வாய் உள்ளிட்ட பகுதிகளில் படுகாயமடைந்த சண்முகவள்ளிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
மற்ற இருவரும் லேசான காயங்களுடன் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இரு மோட்டார் பைக்குகள் மோதிக்கொண்ட விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.