Coimbatore News in Tamil: பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கி அரசு பேருந்து பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் நடித்த “எங்க வீட்டு பிள்ளை” படத்தில் இடம்பெற்ற “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்” என்ற பாடல் பேருந்தில் ஒலிக்கவே பயணம் செய்த மூதாட்டி ஒருவர் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உற்சாகமாக பாடலுக்கு தகுந்தபடி
நடனம் ஆடினார்.
மூதாட்டி நடனத்தை சக பயணிகள் கண்டு ரசித்ததோடு தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர் அந்த வீடியோவை பயணி ஒருவர் சமூக வளைதளங்களில் பதிவிட்டார். தற்போது அந்த மூதாட்டியின் நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#WATCH || கோவை: ஓடும் பஸ்ஸில் எம்.ஜி.ஆர் டூயட் பாட்டுக்கு நளினமாக டான்ஸ் ஆடிய மூதாட்டி- வீடியோhttps://t.co/gkgoZMqkWC | #Coimbatore | #MGR pic.twitter.com/0HqppuIfZ8
— Indian Express Tamil (@IeTamil) September 29, 2022
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil