/indian-express-tamil/media/media_files/2025/07/26/coimbatore-omni-bus-accident-cctv-video-tamil-news-2025-07-26-10-53-54.jpg)
கோவை அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து அடுத்தடுத்து, இருசக்கர வாகனம், கார்கள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மீது மோதி கோர விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதபதைக்க வைத்துள்ளது.

கோவையிலிருந்து பயணிகளுடன் பெங்களூரை நோக்கி ஆம்னி பேருந்து சென்று கொண்டு இருந்துள்ளது. அப்போது கோவை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து முன்னால் சென்ற இருசக்கர வாகனம், கார்கள்,லாரி மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பத்துக்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, விபத்து நடந்த இடத்துக்கு அருகில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டுள்ளனர். அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் பிரேக் பிடிக்காததால் வாகனம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்னி பேருந்து, வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகிய பதப்பதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து... அடுத்தடுத்து ஏற்படுத்திய விபத்து; பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!#Coimbatore | 📹 @rahman14331 pic.twitter.com/cSmq4aIUr7
— Indian Express Tamil (@IeTamil) July 26, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.