கோவையில் இரவு நடை சாத்திய பிறகு ஸ்பெஷல் தரிசனம்: பக்தர்கள் கேள்வி எழுப்பிய வீடியோ வைரல்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடை சாத்திய பிறகு தாமதமாக வந்த ஒரு நபருக்காக மீண்டும் கோயில் நடையை திறந்து வழிபாடு செய்ய ஊழியர்கள் அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடை சாத்திய பிறகு தாமதமாக வந்த ஒரு நபருக்காக மீண்டும் கோயில் நடையை திறந்து வழிபாடு செய்ய ஊழியர்கள் அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

author-image
WebDesk
New Update
Temple issue

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடை சாத்திய பிறகு தாமதமாக வந்த ஒரு நபருக்காக மீண்டும் கோயில் நடையை திறந்து வழிபாடு செய்ய ஊழியர்கள் அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பக்தர்கள் கேள்வி எழுப்பிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் ஆலயம், இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. இக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக இரவு கோயில் நடை சாத்திய பிறகு மீண்டும் காலையில் மட்டுமே நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.

இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் நடை சாத்திய பிறகு ஒரு நபர் வந்துள்ளார். அவருக்காக கோயில் ஊழியர்கள் சாத்திய நடையை மீண்டும் திறந்து, அவரை சாமி தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர். இதனைக் கண்ட அங்கிருந்த பக்தர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்ததுடன், இது குறித்து கோயில் ஊழியர்கள் மற்றும் அந்த நபரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள், "அவர் அதிகாரி, கார் லேட்டாகிவிட்டது; விடுங்கள்" என்று கூறினர்.

இந்த சூழலில், சம்பந்தப்பட்ட நபர் மீதும், கோயில் அலுவலர்கள், நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி அமைப்பினர், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தனர்.

Advertisment
Advertisements

 

Temple case

 

இது குறித்துப் பேட்டியளித்த இந்து முன்னணி மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் சதீஷ், "ஆகம விதிகளை மீறி தனி நபருக்காக நடை திறக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது. இதை கண்டுகொள்ளாமல் அறநிலையத்துறை உறங்கிக் கொண்டிக்கிறது. அந்த நபரை கைது செய்ய வேண்டும் அல்லது பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்.

 

 

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் எதற்கும் பதிலளிக்கமாட்டார். அப்படி இருக்கும்போது இதற்கு மட்டும் பதிலளித்து விடுவாரா? ஆகம விதிகள் மீறப்படும் போது மக்களே தன்னெழுச்சியாக போராட முன்வருவார்கள்" எனத் தெரிவித்தார்.

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: