Advertisment

என்னடா இது போலீசுக்கு வந்த சோதன… பாதியிலே பழுதான காரை ரோட்டில் தள்ளும் அவலம் - வீடியோ!

கோவையில் ஸ்டார்ட் ஆகாமல் சாலையில் நின்ற ரோந்து வாகனத்தை போலீசார் தள்ளி செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore: police patrol vehicle breakdowns in mid Tamil News

கோவை கரும்புக்கடை காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட 'டாடா சுமோ' ரோந்து வாகனம் காவல் நிலையம் அருகேயே பழுதாகி நின்றது.

பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

Advertisment

மாநகர காவல் எல்லைக்குட்டபட்ட பகுதிகளான கரும்புக்கடை, சுந்தராபுரம், போத்தனூர் ஆகிய பகுதிகளில் புதிதாக காவல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இந்த காவல் நிலையங்களுக்காக ரோந்து வாகனங்களும் வழங்கப்பட்டுள்ளது. அதில் சில வாகனங்கள் பல வருடங்களுக்கு முன் பயன்படுத்திய "டாடா சுமோ" வாகனங்களாக உள்ளது என காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது.

publive-image

இந்நிலையில், கரும்புக்கடை காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்ட 'டாடா சுமோ' ரோந்து வாகனம் ஒன்று காவல் நிலையம் அருகே பழுதாகி நின்றது. பலமுறை அதனை ஸ்டார்ட் செய்ய முயற்சித்தும் தோல்வியில் தான் முடிந்தது. இதனால், ஸ்டார்ட் ஆகாத வாகனத்தை சக காவலர்கள் தள்ளி கொண்டே சென்று காவல் நிலையத்தில் நிறுத்தினர்.

publive-image

ரோந்து செல்லும் போது எந்நேரத்தில் வேண்டுமானாலும் குற்றவாளிகளை விரட்டி செல்ல நேரிடும். அது போன்ற நேரங்களில் பாதியில் ரோந்து வாகனங்கள், இப்படி பழுதாகி நின்றுவிட்டால் என்ன செய்வார்கள் என கேள்விகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது. காலத்திற்கேற்ப புதிய வாகனங்களை காவல் நிலையங்களுக்கு அளித்தால் நன்றாக இருக்கும் எனவும், பல்வேறு விஷயங்களுக்கு செலவு செய்யும் அரசு இதற்கும் நிதி ஒதுக்கி காவல்நிலையங்களுக்கு புதிய வாகனங்களை அளிக்க வேண்டும் என கோவை மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது காவலர்கள் பழுதாகி நின்ற வாகனத்தை தள்ளி செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamilnadu Viral Social Media Viral Coimbatore Viral Video Viral News Tamil Viral Video
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment