பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனச்சரகம் என நான்கு வனச்சரங்கள் உள்ளன. இப்பகுதிகளில் யானை, சிறுத்தை, புலி கரடி, காட்டுமாடு, செந்நாய், புள்ளிமான், கடமான் உள்ளிட்ட வனவிலங்குகள் அபூர்வ தாவரங்கள் பறவை இனங்கள், பாம்பு வகைகள் ஏராளமாக உள்ளன. பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உலாந்தி வனசரகம் டாப்சிலிப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் காட்டு யானை கூட்டங்கள் செல்லும் வழிகளிலும் தென்படுகிறது. தற்போது எருமப்பாறை மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதியில் கடந்த இரு நாட்களாக காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருகிறது. யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil