Advertisment

ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்... துரிதமாக செயல்பட்டு மீட்ட போலீஸ் - வீடியோ

கோவையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்த நிலையில், துரிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் அவரை பத்திரமாக மீட்டார்.

author-image
WebDesk
Sep 16, 2023 11:42 IST
Coimbatore Railway Police Rescue woman dragged by moving train Video

ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், துரிதமாக செயல்பட்டு நடைமேடைக்கு இழுத்து விபத்திலிருந்து காப்பாற்றினார்.

கோவையில் ரயில் நிலையத்தில் இன்று மதியம் கோவையில் இருந்து சென்னை செல்லும் ரயில் புறப்பட்டது. அப்போது அவசரவசமாக வந்து ரயிலில் இரு பெண்கள் ஏற முயன்றனர். அதில் ஒரு பெண் ரயிலில் ஏறிய நிலையில், மற்றொரு பெண் ஏறும்போது ரயிலிலிருந்து தவறி கீழே விழுந்தார். 

Advertisment

ரயில் சென்று கொண்டு இருந்த நிலையில் தவறி விழுந்த பெண்ணை பார்த்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் ராஜேஷ் கண்ணன், துரிதமாக செயல்பட்டு நடைமேடைக்கு இழுத்து விபத்திலிருந்து காப்பாற்றினார். இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

அந்த வீடியோவில் ரயிலில் இரு பெண்கள் ஏற முயற்சிப்பதும், ஒரு பெண் ஏறிய நிலையில் மற்றொரு பெண் ஏறும்போது ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுவதும், அவரை தலைமை காவலர் காப்பாற்றுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனிடையே, துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய தலைமை காவலருக்கு ரயில்வே பாதுகாப்பு படை பிரிவு போலீசார் மற்றும்  பயணிகள் பாராட்டு தெரிவித்தனர். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

#Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment