Advertisment

கோவை: கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை... தட்டிக் கேட்ட தம்பதியினர் - வைரல் வீடியோ!

கோவை டீ கடையில் கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை தொடர்பாக கேள்வி எழுப்பிய தம்பதியினரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Coimbatore Selling spoiled soft drinks in Tea shop young couple questions Viral video Tamil News

கோவை டீ கடையில் கெட்டுப்போன குளிர்பானம் விற்பனை தொடர்பாக கேள்வி எழுப்பிய தம்பதியினரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்.

கோவை போத்தனூரைச் சேர்ந்த சன்சர் - நிஷா தம்பதியினர் அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பீட்சா உணவு ஆர்டர் செய்து காத்து இருந்தனர். அப்போது, அருகே உள்ள டீக் கடைக்கு சென்று கேக் மற்றும் மா (maa) குளிர்பானம் வாங்கியுள்ளனர். குளிர்பானத்தை திறந்து கணவர் சன்சர் குடிக்கும் போது அது கெட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. 

Advertisment

இது குறித்து கடையில் பணியில் இருந்தா நபரிடம் கேட்ட போது, அது கெட்டுப் போகவில்லை எனக் கூறியுள்ளார். மேலும் அதன் காலாவதியே காலம் இன்னும் ஆறு மாதங்கள் இருக்கின்றது தற்பொழுது தான் புதிதாக வாங்கினேன் என்று கூறியுள்ளார். 

இந்நிலையில், அதனை அருகில் இருந்தவர்களிடம் குடித்துப் பார்க்க கூறியுள்ளார். அதை வாங்கி குடிக்கும் பார்க்கும் போது, அது கெட்டுப் போய் உள்ளதாக அவர் கூறினார். 

இதனை தனது செல்போனில் பதிவு செய்த அந்த தம்பதி சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். இது போன்ற கெட்டுப்போன பொருட்களை குழந்தைகளுக்கு கொடுத்தால் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்தனர். இதுகுறித்து உணவுத்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய பொருள்களை பறிமுதல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தி: ரகுமான் - கோவை.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Viral Coimbatore Viral Video Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment