New Update
/indian-express-tamil/media/media_files/1c9Y3ReVdLDTGXhdN7a0.jpg)
கோவை கவுண்டம்பாளையம் சரவணா நகர் பகுதியில் உள்ள விஜர் என்பவரின் வீட்டில் 4 அடி நீளமுள்ள நாக பாம்பு ஒன்று கேட்டில் நுழைந்து வீட்டின் படிக்கட்டுக்கு வந்து கொண்டு இருந்தது. பாம்பு படிக்கட்டில் ஏறி வீட்டிற்குள் நுழைய முற்பட்டது. அப்போது வீட்டில் வளர்க்கப்பட்டு வரும் செல்லப் பிராணியான பூனை, பாம்பை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்திருக்கிறது. பூனை சீறலை அறிந்தவுடன் வீட்டில் உள்ளவர்கள் கதவை மூடியுள்ளனர்.
படிக்கட்டு தாண்டக் கூடாது: வீட்டுக்குள் நுழைய முயன்ற நாகப் பாம்பை தடுத்து நிறுத்திய பூனை#Coimbatore pic.twitter.com/A2aw1AGimX
— Indian Express Tamil (@IeTamil) November 22, 2023
தொடர்ந்து இதுகுறித்து வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அங்கு வந்த பாம்பு பிடி வீரர் பாம்பை பிடித்து பாட்டிலில் அடைத்தார்.
பூனை மற்றும் பாம்பு நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பும், பூனையும் கிட்டத்தட்ட 15 நிமிடம் ஆடாமல் அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.