/indian-express-tamil/media/media_files/2025/07/26/coimbatore-snake-2025-07-26-14-25-58.jpg)
Coimbatore
கோவை, இடையர்பாளையம், நடராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா. இவருக்குச் சொந்தமாக ஒரு டஸ்டர் கார் உள்ளது. வழக்கம் போல் தனது காரை வீட்டின் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார்.
சம்பவத்தன்று அனிதா வெளியே செல்வதற்காக காரில் ஏறினார். அப்போது திடீரென "உஷ்..உஷ்" என்ற சத்தம் காருக்குள் இருந்து கேட்டது. சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சந்தேகம் அடைந்த அனிதா, உடனடியாக காரை விட்டு வெளியேறி, காரைச் சுற்றிலும் தேடிப் பார்த்தார்.
கோவையில் கார் ஒன்றில் புகுந்த 10 அடி நீள சாரைப் பாம்பு. காரில் இருந்து உஷ் என்ற சத்தம் கேட்டு உரிமையாளர் அனிதா பதற, பாம்பு பிடி வீரர் விக்னேஷ் விரைந்து வந்து பாம்பை லாவகமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டார்.#Coimbatorepic.twitter.com/yzdzTcU4s0
— Indian Express Tamil (@IeTamil) July 26, 2025
அப்போது காரின் இடதுபுறத்தில் சிறிய வால் மட்டும் வெளியே தெரிந்தது. அது பாம்பு என்பதை உணர்ந்த அனிதா, சற்றும் தாமதிக்காமல் பாம்பு பிடி வீரர் விக்னேஷுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்த விக்னேஷ் உடனடியாக இடையர்பாளையம் பகுதிக்கு விரைந்தார். காரின் உள்ளே இருந்த பாம்பைப் பிடிக்க முயன்றபோது, அது விஷமற்ற சாரைப் பாம்பு என்பது தெரியவந்தது. சுமார் 10 அடி நீளம் கொண்ட அந்தப் பாம்பைப் பிடிக்க விக்னேஷுக்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராட வேண்டியிருந்தது. இறுதியில், மிகவும் லாவகமாக அந்தப் பாம்பைப் பிடித்தார்.
விஷமற்ற சாரைப் பாம்பால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்த விக்னேஷ், அந்தப் பாம்பை அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவதாகக் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.