Coimbatore News in Tamil: கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் நஞ்சுண்டாபுரம் கிராமம் அமையுள்ளது. இந்நிலையில், நள்ளிரவு வனப்பகுதியில் இருந்து குட்டியானைகளுடன் வெளியேறிய காட்டு யானை கூட்டம் கிராமத்தின் சாலைகளில் சுற்றித் திரிந்தன. யானைகள் ஊருக்குள் புகுந்த தகவல் அறிந்த பொதுமக்களும், வனத்துறையினரும் யானைகளை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
இதேபோல், நேற்று அதிகாலை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் அரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு ஒற்றை யானை புகுந்துள்ளது. வெயில் காரணமாக வனப்பகுதிக்குள் வறட்சி நிலவுவதன் காரணமாக, தண்ணீர் மற்றும் உணவு தேடி காட்டு யானைகள் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
#Video || வெயில், வனப்பகுதியில் வறட்சி: நள்ளிரவில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் – வீடியோ!https://t.co/gkgoZMIuaK | #Coimbatore | #elephant | @rahman14331 pic.twitter.com/NN9prUPwPO
— Indian Express Tamil (@IeTamil) April 21, 2023
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil