/tamil-ie/media/media_files/uploads/2023/07/Tiger.jpg)
Coimbatore tiger roar in road side video
பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் பெரியார் புலிகள் காப்பகம் கேரளா மாநில வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு காட்டு யானை, புலி, சிறுத்தை புலி, புள்ளிமான் போன்ற பாதுகாக்கப்பட வன உயிரினங்கள் உள்ளன.
இயற்கை எழில் கொஞ்சும் இந்த பகுதி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு இடம் ஆகும்.
இங்கு அடிக்கடி யானை, புள்ளி மான் கூட்டம், காட்டு மாடுகள் வனப்பகுதியில் உள்ள சாலை ஓரங்களில் உலா வருவது வழக்கம். சிறுத்தை புலி மற்றும் புலிகள் இங்கு பார்ப்பது அரிது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பரம்பிக்குளம் வனப்பகுதியில், சாலையோரம், புலி சுற்றி வந்ததை கண்ட வாகன ஓட்டி ஒருவர் எடுத்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.