New Update
/
கோவை மாநகரத்தின் பல்வேறு இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டு வருகிறது. தற்போது பெய்து வரும் மழையால் குழியான இடங்களில் நீர்தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் கோவை புலியகுளம் பகுதி சாலையில் அரை அடி ஆழத்திற்கு குழி இருந்துள்ளது. இதில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
Video: கோவை புலியகுளம் பகுதி சாலையில் இருந்த பள்ளத்தை ரெடிமிக்ஸ் காங்கிரட்டை ஊற்றி சரி செய்த போக்குவரத்து காவலர்கள்
— Indian Express Tamil (@IeTamil) May 25, 2024
குவியும் பாராட்டு#Coimbatore pic.twitter.com/2LafaaSdZK
இதனிடையே பந்தய சாலை போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுவாதி அப்பகுதியில் சென்ற ரெடி மிக்ஸ் கான்கிரீட் வாகனத்தை அழைத்து வந்தார். பின்னர் காவலர்கள் கார்த்தி, உதயகுமார் குழியில் ரெடி மிக்ஸ் கான்கிரீட் ஊற்றி அந்த குழியை சரி செய்தனர்.
இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சாலையை சரிசெய்த போக்குவரத்து காவலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.