இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற பெண்; மற்றொரு டூவீலர் மோதி விபத்து: அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி

கோவையில், இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ச்சியளிக்கும் இந்த விபத்தின் சிசிவிடி காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
New Update
Cbe addicent

கோவையில், இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை, குனியமுத்தூர் விஜயலட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே சாலையைக் கடப்பதற்காக சிலர் இருசக்கர வாகனத்தில் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பெண் தனது வாகனத்தில் சாலையைக் கடந்தார்.

அப்பெண் சாலையைக் கடந்த போது, மற்றொரு இருசக்கர வாகனம் அப்பெண்ணின் மீது வேகமாக மோதியது. இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் இருவரும் படுகாயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, விபத்துக்குள்ளானவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விபத்து நடந்த பகுதியில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements
Coimbatore accident

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: