கோவையில் உள்ள வ.உ.சி வன உயிரியல் பூங்கா அங்கீகரிக்கப்பட்ட உயிரியல் பூங்கா அந்தஸ்து மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது. இதனை அடுத்து, இங்கு பராமரிக்கப்படும் வன உயிரினங்களை வனப் பகுதியில் விடுவிக்க வேண்டும் என சென்னை முதன்மை வனப் பாதுகாவலர், தலைமை வன உயிரினக் காப்பாளர் ஆணை பிறப்பித்தனர்.
இது தொடர்பாக வ.உ.சி உயிரியல் பூங்காவில் இருக்கும் வன உயிரினங்களை வனத்திற்கு மாற்றம் செய்யும் பணியை வனத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே, கடந்த மே மாதங்களுக்கு முன்பு இங்கு இருந்த புள்ளி மான்கள் வனத்திற்குள் விடுவிக்கபட்டது.
அதன் தொடர்ச்சியாக பூங்காவில் உள்ள கட மான் மாற்றம் செய்ய திட்டமிட்டு அதன் புழுக்கைகளை ( faecal pellets ) ஆய்வகத்திற்கு (AIWC, Vandalur) அனுப்பப்பட்டு கட மான்களுக்கு காசநோய் தொற்றும் எதுவும் இல்லை என்று அறிக்கை பெறப்பட்டது. பின்னர் மார்ச் 2024 மாதம் முதல் மான்களுக்கு வழங்கப்பட்டு வரும் அடர் தீவனங்கள் நிறுத்தப்பட்டு கூடுதலாக பச்சைத் தீவனங்கள் மற்றும் சிறுவாணி மலை அடிவாரப் பகுதிகளில் மான்கள் உண்ணும் தாவர வகைகளை மான்களுக்கு அளிக்கப்பட்டு வந்தது.
இதைத்தொடர்ந்து, இவைகளை வனப் பகுதிக்கு மாற்றம் செய்திட ஏதுவாக கோவை மாநகராட்சி மினி லாரி வாகனத்தில் வனத்துறை மூலம் கூண்டு கட்டமைக்கப்பட்டது. கடந்த 04.07.2024 அன்று ஐந்து கட மான்கள் போலம்பட்டி சரக காப்பு காட்டில் விடப்பட்டது அதன் தொடர்ச்சியாக இன்று கோவை மாவட்ட வன அலுவலர் தலைமையில், வனச்சரக பணியாளர்கள், வனமண்டல வன கால்நடை அலுவலர், வ உ சி வன உயிரியல் பூங்கா இயக்குனர், வனத்துறை அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் முன்னிலையில்
இன்று காலை 8 மணி அளவில் 5 கட மான்களை பிரத்தியேக கூண்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு சிறுவாணி மலை அடிவாரம் பில்டர் ஹவுஸ் சராகம் வனப் பகுதியில் மதியம் 12.00 மணி அளவில் விடுவிக்கப்பட்டது.
விடுவிக்கப்பட்ட கட மான்கள் தீவன உட்கொள்ளுதல், நீர் அருந்துதல் மற்றும் அதன் ஆரோக்கியத்தினை தொடர்ந்து கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil