New Update
/
coimbotore: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் மார்ச் மாதம் தொடக்கம் முதல் அதிகரித்து வருகிறது. ஈரோடு, கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பநிலை அளவு 100 டிகிரியை செல்சியசை தாண்டி உள்ளது. இதனால் மக்கள் இளநீர், தர்பூசணி, மோர், தண்ணீரை தேடி செல்கின்றனர்.
இந்த நிலையில், கோவை வெள்ளிங்கிரி மலை அடிவார வனப்பகுதியில் இருக்கும் குரங்குகள் வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் தேடியும், உணவுக்காக சுற்றி வருகிறது. இந்த நிலையில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து வெள்ளிங்கிரி மலையேற்றத்திற்காக பக்தர்கள் அதிகளவு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பக்தர்கள் கையில் கூல்டிரிங்ஸ், குடிநீர் பாட்டில்களை எடுத்து வருகின்றனர். அப்படி எடுத்து வந்த கூல்ட்ரிங்ஸ் பாட்டில் ஒன்றை பக்தரிடம் இருந்து குரங்குகள் பெறுகின்றன. அதனை லாபகமாக எடுத்துச் சென்று மரத்தின் மேல் அமர்ந்து குடித்து தாகத்தை தீர்த்துக் கொண்டுள்ளன.
இதே போல், மற்றொரு குரங்கு அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தானாக குழாயை அழுத்தி நீர் அருந்துவதோடு, பாட்டிலில் இருந்த குடிநீரை குடித்தது. மேலும், வெள்ளிங்கிரி மலை அடிவார கோவில்களில் பூஜைக்காக எடுத்து வரப்படும் பழங்கள் அங்குள்ள குரங்குகளுக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
— Indian Express Tamil (@IeTamil) March 12, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.