வெள்ளிங்கிரி மலை கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை சூராடிய ஒற்றை காட்டு யானையின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள வெள்ளிங்கிரி மலை கோவிலுக்கு தமிழக மட்டுமில்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தந்து ஏழுமலை ஏற்றம் சென்று சுயம்பு லிங்கத்தை தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த இடம் வனப்பகுதி என்பதால் இரவு நேரங்களில் காட்டு யானைகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். அதனால் வனத் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதங்களாக ஒற்றைக் காட்டு யானை பகல் நேரத்திலே வெள்ளிங்கிரி மலை கோவில் வளாகத்துக்கு சென்று அங்கு உள்ள பிரசாத கடை, பெட்டிக்கடை, பொம்மை கடைகளை, சூறையாடிவிட்டு பின்னர் பிரசாதம் கடைக்கு சென்று அங்கு உள்ள பொருட்களை சாப்பிட்டுவிட்டு செல்வது வழக்கமாகி விட்டது. அதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் உள்ள கடை வியாபாரிகள் அச்சத்துடன் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது அதே ஒற்றைக் காட்டு யானை வனப்பகுதியில் இருந்து நேராக வெள்ளிங்கிரி மலை கோவில் வளாகத்தில் உள்ள கடைக்கு சென்று கடைகளை சூறையாடி மீண்டும் பிரசாதம் கடைக்கு சென்று பிரசாதத்தை அள்ளி சாப்பிட்டு விட்டு செல்லும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மலையடிவரப் பகுதியில் வெள்ளிகிரி மலை கோவில் இருப்பதால் வன விலங்குகளால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.
இதன் காரணமாக தற்காலிக வனத்துறை அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும், தொடர்ந்து ஒற்றைக் காட்டு யானையால் வெள்ளிங்கிரி மலை கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் மற்றும் அங்கு கடை அமைத்து உள்ள வியாபாரிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். அதனால் கும்கி யானை கொண்டு ஒற்றைக் காட்டு யானையை அடர்ந்த வனப் பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“